சளி, தொண்டை வலியால் அவதிப்படுறீங்களா? எளிய வீட்டு வைத்தியம் இதோ
சளி, தொண்டை புண் மற்றும் மூக்கடைப்பு பிரச்சினைக்கு வீட்டு பொருட்களை வைத்து எளிய குறிப்புகளை இங்கு தெரிந்து கொள்வோம்.
குளிர் மற்றும் கோடை காலங்களின் காலநிலை மாற்றத்தினால் உடல்நல பாதிப்பு ஏற்படுவது வழக்கமாகியுள்ளது.
அதிலும் சளி இருமல் பிரச்சினையில் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொண்டை புண் மற்றும் மூக்கடைப்பு பிரச்சினைகளுக்கு பல மருந்துகளை நாம் பயன்படுத்தினாலும் அதற்கான தீர்வுகள் கிடைப்பது தாமதமாகவே செய்யும்.
இத்தருணத்தில் சில வீட்டு பொருட்களை வைத்து சளி இருமல், தொண்டை புண் பிரச்சினைக்கு தீர்வு காணலாம்.
எளிய வீட்டு வைத்தியம்
தொண்டை பிரச்சினைக்கு தற்காலிக நிவாரணம் பெற வெதுவெதுப்பான நீரை குடிக்கவும்.
வெதுவெதுப்பான நீரில் சிறிது தேன் சேர்த்து குடித்தால், சளி இருமலை குணப்படுத்தும்.
தொண்டையில் உப்பு நீர் வைத்து வாய் கொப்பளித்தால், ஜலதோஷம் மற்றும் கலங்கிய குரல் பழைய நிலைக்கு வரும்.
இஞ்சி சாறுடன் தேன் கலந்து குடித்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும். தொண்டை கரகரப்பு அல்லது தொண்டை வலிக்கு நல்ல தீர்வு அளிக்கின்றது.