ஒண்ணு கூடிட்டாங்கய்யா!.. வனிதா மகளுடன் கெட்டுகெதர் போட்டது யாருன்னு பாருங்க.. ஷாக் ஆகிடுவீங்க!

பிக் பாஸ் சீசன் 7 மட்டுமில்லை எந்தவொரு சீசனாக இருந்தாலும் உள்ளே அடித்துக் கொள்ளும் நபர்கள் வெளியே எவிக்ட் ஆகி விட்டால் ஒன்றாக பேசுவதும், பழகுவதும் ரீயூனியன் செய்வதும் புதிய விஷயமல்ல. தற்போது பிக் பாஸ் வீட்டில் இருந்து லேட்டஸ்ட் ரிலீஸ் ஆன நிக்சன் வனிதா மகளுடன் சந்தித்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

நிக்சனை வனிதா விஜயகுமார் எந்தளவுக்கு தனது விமர்சனத்தில் கழுவி ஊற்ற முடியுமோ அந்த அளவுக்கு கழுவி ஊற்றினார். ஆனால், தற்போது நிக்சன் உடன் ஜோவிகா நின்று கொண்டு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படத்தை வனிதாவே ஷேர் செய்துள்ளார்.

மேலும், இந்த சீசனின் டைட்டில் வின்னரே நான் தான் என பைத்தியம் போல சுற்றிக் கொண்டிருந்த விக்ரமும் சமீபத்தில் வெளியேற்றப்பட்ட நிலையில், அவரும் இந்த கூட்டணியில் ஐக்கியமாகி விட்டார்.

இதெல்லாம் பெரிய ரீயூனியனே இல்லை என்றும் ஒட்டுமொத்த புல்லி கேங்கும் ஒருநாள் வெளியே கூடி ஒரு போட்டோ வெளியிடும் பாருங்க அதுதான் மிகப்பெரிய பிக் பாஸ் சீசன் 7 ரீயூனியனாக இருக்கும் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

மேலும், ஜோவிகா ஹீரோயினாக நடிக்கப் போற படத்துல அவருக்கு ஜோடி நிக்சன் தான் என்றும் அவர் தான் இந்த சீசனின் காதல் இளவரசன் என கண்டபடி கமெண்ட்டுகளை போட்டுத் தாக்கி வருகின்றனர்.

ஜோவிகா விஜயகுமார் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில் பார்த்திபன் உதவி இயக்குநராக மாறிவிட்டார் என வனிதா பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *