ஐபோன் 15 மாடல் யூஸ் பண்றீங்களா..? இப்படி செய்தால் போதும் பேட்டரியை சேமிக்கலாம்!

ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்தில் ட்ரெண்டிங்கில் இருந்த ஐபோன் 15 மாடல் ஸ்மார்ட்போனில், பல யூசர்களும் பேட்டரி திறன் குறைவாக இருப்பதாகக் கருதுகின்றனர். இதற்கு போனில் உள்ள ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே எனும் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஆப்ஷன்தான் காரணமாகக் கூறப்படுகிறது.

ஐபோன் 14 ப்ரோ சீரிஸ் முதல் இந்த AOD அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது ஐபோன் 15 ப்ரோ, 15 ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்களும் இதே அம்சத்தைக் கொண்டுள்ளன. இதன் வாயிலாக போனை லாக் செய்தாலும், திரையில் நேரம், தேதி, காலநிலை, நோட்டிஃபிகேஷன்ஸ், விட்ஜெட்டுகள் ஆகியன திரையில் ஆக்டிவாக காட்சி தரும். இதன் காரணமாக போனின் பேட்டரியானது யூசர்களின் எதிர்பார்ப்புகளை பொய்யாக்கி வேகமாகக் குறையும். எனவே, ப்ரோ மாடல் ஐபோன் பேட்டரியை எப்படி நிர்வகிப்பது என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே அம்சத்தை பயன்படுத்தும் முன் நீங்கள் அறிந்து வைத்திருக்க வேண்டிய விஷயங்கள் சில உள்ளன. அவை என்ன என்பதை முதலில் பார்க்கலாம்.

– முதலில் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே எனப்படும் AOD அம்சமானது, ஐபோன் 14 ப்ரோ, ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ், ஐபோன் 15 ப்ரோ, ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஆகிய ஸ்மார்ட்போன்களில் மட்டுமே கிடைக்கும்.

– சில நேரங்களில் இந்த அம்சம் தானாகவே நிறுத்தி வைக்கப்படும். அதாவது, உங்கள் ஐபோனில் சார்ஜ் குறைவாக இருந்தாலோ, ஐபோன் திரை கீழ் பக்கமாக திருப்பி வைத்திருந்தாலோ, ஸ்லீப் ஃபோக்கஸ் மோடு ஆக்டிவேட் செய்யப்பட்டிருந்தாலோ, ஐபோன் கன்டினியூட்டி கேமரா சர்விஸ் ஆக்டிவாக இருந்தாலோ, இந்த ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே அம்சம் செயல்படாது.

இப்போது இந்த ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே உங்கள் பேட்டரி திறனை அதிகம் எடுத்துக் கொள்கிறது என்று நீங்கள் நினைத்தால், அதனை எப்படி ஆஃப் செய்வது என்று பார்ப்போம்.

– முதலில் ஐபோனின் அமைப்புகள் (Settings) பக்கத்திற்குச் செல்லவும்

– கீழே ஸ்க்ரோல் செய்து, டிஸ்ப்ளே & பிரைட்னஸ் (Display & Brightness) என்பதை கிளிக் செய்யவும்

– தொடர்ந்து இந்த பக்கத்தின் கடைசி வரை ஸ்க்ரோல் செய்யும்போது, ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே (Always On Display) எனும் ஆப்ஷனை காண்பீர்கள்.

– அதில் இருக்கும் பட்டனை கிளிக் செய்து இந்த ஆப்ஷனை நீங்கள் ஆஃப் செய்து வைக்கலாம்.

– இதனையடுத்து, நீங்கள் போனை லாக் செய்யும்போது, திரை டார்க்காக கருப்பு நிறத்தில் மாறிவிடும்

அதேபோல, ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே மோடை மீண்டும் ஆக்டிவேட் செய்ய, இதே முறையைப் பின்பற்றி ஆஃப் செய்ததை மாற்றி ஆன் செய்தால் போதும். பழையபடி உங்கள் AOD மோடு செயல்பாட்டுக்கு வந்துவிடும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *