கேரளாவில் அர்ஜென்டினா அணி

மலப்புரம்: கால்பந்து உலக சாம்பியன் அர்ஜென்டினா, இந்திய மண்ணில் நட்பு போட்டியில் விளையாட வருகிறது.உலக கோப்பை கால்பந்தின் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா.
மெஸ்சி தலைமையிலான இந்த அணி 2022ல் சாம்பியன் ஆனவுடன், கேரளா அரசு சார்பில் இந்தியாவில் வந்து விளையாட வருமாறு அழைப்பு விடப்பட்டது. அர்ஜென்டினா உடனான நட்பு போட்டியை கேரளாவில் நடந்த அம்மாநில அரசு விருப்பம் தெரிவித்தது. இந்த அழைப்பை அர்ஜென்டினா கால்பந்து கூட்டமைப்பு (ஏ.எப்.ஏ.,) ஏற்றுள்ளது. இந்திய மண்ணில் விளயைாட விருப்பம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கேரளா அரசுக்கு ‘இ~மெயில்’ அனுப்பியுள்ளது. கேரள விளையாட்டு துறை அமைச்சர் அப்துரஹிமான் கூறுகையில்,”அர்ஜென்டினா அணி கேரளா வர விருப்பம் தெரிவித்துள்ளது எங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளது. ஜூலை மாதம் கேரளாவில் மழைக்காலம் என்பதால் தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இதுகுறித்த விபரங்கள் மாநில அரசு, ஏ.எப்.ஏ., இடையிலான பேச்சுவார்த்தைக்குப் பின் தெரிவிக்கப்படும்.