வெளியானது அர்ஜுன் தாஸ், காளிதாஸ் நடித்த போர் பட டீசர்!
இயக்குனர் பிஜோய் நம்பியார் இயக்கத்தில், இருமொழிப் படமாக உருவாகியுள்ள திரைப்படம் “போர்”. இந்த படத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் காளிதாஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் இந்தி பதிப்பில் ஹர்ஷ்வர்தன் ரானே மற்றும் எஹான் பட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
குல்ஷன் குமார், டி-சீரிஸ், ரூக்ஸ் மீடியா & கெட்அவே பிக்சர்ஸ் நிறுவனங்கள் சார்பில், பூஷன் குமார், கிரிஷன் குமார், பிரபு ஆண்டனி, மது அலெக்சாண்டர், பிஜாய் நம்பியார் ஆகியோர், ‘போர்’ திரைப்படத்தை தயாரித்துள்ளனர். இந்தப் படத்தின் டீசர் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.