Arteries: இதய நோய்கள் ஏற்பட காரணங்கள்! தமனிகளில் ரத்த அடைப்பை ஏற்படுத்தும் உணவுகள்
தமனிகளில் அடைப்பு ஏற்பட்டால், தமனிகளின் சுவர்களில் பிளேக் உருவாகத் தொடங்குகிறது. பிளேக் கொழுப்பு மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் ஆனது.
நமது மோசமான வாழ்க்கை முறை, துரித உணவு மற்றும் புகைபிடித்தல் போன்ற பழக்கவழக்கங்கள் பல நிரந்தர பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அதில் முக்கியமானது இதயத்திற்கு ஏற்படும் பிரச்சனைகள் ஆகும். அதிலும், இதயத்தினி தமனிகளில் அடைப்பு அல்லது பெருந்தமனி தடிப்பு பிரச்சனை ஏற்பட்டால், அது பல நோய்களை கூடவே அழைத்து வந்துவிடுகிறது.
தமனிகளின் சுவர்களில் பிளேக் உருவாகத் தொடங்குகிறது. பிளேக் என்பது, கொழுப்பு மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் ஆனது. இந்த பிளேக், காலப்போக்கில் தமனிகளின் உள்ளே படிந்து, இரத்த ஓட்டத்தை குறைத்துவிடுகிறது. இரத்த ஓட்டம் குறைவதால் தமனிகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது
அதிக எடை, உயர் இரத்த அழுத்தம், உயர் இரத்த சர்க்கரை மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் போன்ற காரணங்களாலும் தமனிகளில் அடைப்பு ஏற்படுகிறது. தமனிகளில் ஏற்படும் அடைப்பு, மாரடைப்பு, பக்கவாதம், இரத்த உறைவு, பார்கின்சன் போன்ற பல கடுமையான நோய்களை ஏற்படுத்துகிறது.
உடல்ரீதியான கோளாறுகள் ஒருபுறம் என்றால், நாம் உண்ணும் பல உணவுப் பொருட்களும் தமனிகளில் பிரச்சனையை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ள உணவுகள் அதிக தீங்கு விளைவிக்கும். கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை போன்ற பிற உணவுகளும் தமனிகளில் அடைப்பை ஏற்படுத்தும். நமது தமனிகளுக்கு ஆபத்தான உணவுகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
ஃபாஸ்ட் ஃபுட்
துரித உணவு சுவை நிறைந்ததாக இருக்கலாம், ஆனால் அது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். பிரஞ்சு ஃப்ரை, பொரித்த சிக்கன், பீட்சா, ரொட்டி, பாஸ்தா போன்றவற்றில் கொழுப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள், உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். இவற்றை குறைவான அளவில் உட்கொள்ள வேண்டும். உருளைக்கிழங்குக்கு பதிலாக சர்க்க்ரை வள்ளிக்கிழங்கு பொரியல் சாப்பிடலாம். இது போன்று, உடலுக்கு தீங்கு செய்யும் உணவுப் பொருட்களுக்கு மாற்றுகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.
சுத்திகரிக்கப்பட்ட தானியங்களை விலக்கும்
மாவு மற்றும் மாவுப் பொருட்கள் போன்ற சுத்திகரிக்கப்பட்ட தானியங்களைத் தவிர்ப்பது நல்லது. சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள் தமனிகளை குறுக்கிவிடும் அபாயம் அதிகம். இதற்கு பதிலாக முழு தானியங்களை உட்கொள்ள வேண்டும். இவை மிகவும் ஆரோக்கியமானவை. அதிக நார்ச்சத்து இருப்பதால், அவை தமனிகளில் கொழுப்பு சேர அனுமதிக்காது.