பிரித்தானிய கல்வியில் தாக்கம் செலுத்தும் செயற்கை நுண்ணறிவு
பிரித்தானியாவில் பெரும்பாலான இளங்கலை மாணவர்கள் தங்கள் ஆய்வறிக்கைகளுக்கு செயற்கை நுண்ணறிவு மென்பொருளைப் பயன்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்நாட்டு பாடசாலைகளில் படிக்கும் மாணவர்கள் வகுப்பறைகளில் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் உதவியை நாடியிருப்பதும் தெரியவந்துள்ளது.
பிரித்தானிய உயர் கல்விக் கொள்கை நிறுவனம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளங்கலைப் பட்டதாரிகளிடம் சமீபத்தில் நடத்திய ஆய்விலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நுண்ணறிவு மென்பொருள்
குறிப்பாக 53% இளங்கலைப் பட்டதாரிகள், கூகுள் பார்ட் (Google Bard) அல்லது சாட்ஜிபிடி (Chatgpt) போன்ற செயற்கை நுண்ணறிவு மென்பொருளை தங்கள் ஆய்வுக் கட்டுரைகளுக்குப் பயன்படுத்தியதாகக் கூறியுள்ளனர்.
அறிக்கையின்படி, கணக்கெடுக்கப்பட்ட இளங்கலைப் பட்டதாரிகளில் 25% பேர் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளுக்கான தலைப்புகளைப் பரிந்துரைக்க செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தியுள்ளதோடு மேலும் 12.5% பேர் தங்கள் ஆய்வறிக்கை உள்ளடக்கத்தைத் தயாரிக்க அதைப் பயன்படுத்துகின்றனர்.