டூப் இல்லாமல் மாடுபிடி வீரராக நடிப்பேன், இதுதான் நீண்ட நாள் ஆசை. அருண் விஜய் ஓபன் டாக்..!!
கதைக்களம் அமைந்தால் டூப் இல்லாமல் மாடுபிடி வீரனாக நடிப்பேன் என நடிகர் அருண் விஜய் தெரிவித்துள்ளார்.
மதுரை அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை நடிகர் அருண் விஜய் மற்றும் இயக்குனர் ஏ எல் விஜய் ஆகியோர் பார்வையிட்டனர்.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர்கள் உதயநிதி, மூர்த்தி மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் அமர்ந்து பார்வையிட்ட நிலையில் அதன் பிறகு செய்தி அவர்களை சந்தித்து பேசிய அருண் விஜய், ஜல்லிக்கட்டு, மாடுபிடி வீரரை போன்று ஒரு கதைக்களம் அமைந்தால் நிச்சயமாக டூப் இல்லாமல் நடிப்பேன். அது போன்ற ஒரு கதைக்களம் அமைய வேண்டும் என்பதை என்னுடைய நீண்ட நாள் ஆசை என அருண் விஜய் கூறியுள்ளார்.