கனடா போலவே மர்மமான படுகொலைகள்… இந்தியா மீது பகிரங்கமாக குற்றஞ்சாட்டிய ஆசிய நாடு

பாகிஸ்தான் மண்ணில் முன்னெடுக்கப்பட்ட இரண்டு படுகொலைகளுக்கு முதன்மை காரணம் இந்தியா என்பதில் தங்களிடம் உறுதியான ஆதாரங்கள் இருப்பதாக அந்த நாடு பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளது.

மோசமான நடவடிக்கை

கனேடிய மண்ணில் சீக்கிய பிரிவினவாதத் தலைவர்கள் படுகொலையை ஒப்பிட்டு பாகிஸ்தான் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. வியாழனன்று செய்தியாளர் சந்திப்பின் போது, பாகிஸ்தான் வெளிவிவகாரச் செயலர் முஹம்மது சைரஸ் சஜ்ஜாத் காசி தெரிவிக்கையில்,

பாகிஸ்தானுக்குள் சட்டத்திற்குப் புறம்பான கொலைகளை முன்னெடுப்பது என்ற புதிய மற்றும் மோசமான நடவடிக்கையை இந்தியா நடத்தி வருவதாகக் கூறியுள்ளார்.

வெளிநாடுகளில் பாதுகாப்பாக இருந்துகொண்டு நவீன தொழிக்நுட்பத்தை பயன்படுத்தி இந்திய உளவுத்துறையினர் பாகிஸ்தான் மண்ணில் படுகொலையை முன்னெடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களே ஆட்களை தெரிவு செய்து, பணமளித்து, குற்றவாளிகள், பயங்கரவாதிகள் மற்றும் சந்தேகத்தை ஏற்படுத்தாத அப்பாவி மக்கள் உள்ளிட்டவர்களை களமிறக்கி தங்கள் திட்டத்தை நிறைவேற்றுவதாகவும் அவர்
விளக்கமளித்துள்ளார்.

பாகிஸ்தான் முன்வைத்துள்ள இந்த குற்றச்சாட்டானது, சமீபத்திய ஆண்டுகளில் வெளிநாட்டு மண்ணில் இந்தியா சட்டத்திற்கு உட்படாமல் படுகொலைகளை முன்னெடுத்து வருவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு மேலும் வலு சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது.

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் இதுபோன்ற ஒரு குற்றச்சாட்டை அவர்களது நாடாளுமன்ற அவையில் இந்தியா மீது சுமத்தியிருந்தார். ஆனால், ஹர்தீப் சிங் நிஜ்ஜர் படுகொலை தொடர்பில் தங்களை குற்றஞ்சாட்டுவது அபத்தவாதம் என இந்தியா நிராகரித்திருந்தது.

பல ஒற்றுமைகள்

இதனிடையே, அமெரிக்காவும் இதுபோன்ற குற்றச்சாட்டை இந்தியா மீது முன்வைத்தது. மட்டுமின்றி, உரிய நேரத்தில் அப்படியாக ஒரு படுகொலை சதியை முறியடித்துள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *