கனடா போலவே மர்மமான படுகொலைகள்… இந்தியா மீது பகிரங்கமாக குற்றஞ்சாட்டிய ஆசிய நாடு
பாகிஸ்தான் மண்ணில் முன்னெடுக்கப்பட்ட இரண்டு படுகொலைகளுக்கு முதன்மை காரணம் இந்தியா என்பதில் தங்களிடம் உறுதியான ஆதாரங்கள் இருப்பதாக அந்த நாடு பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளது.
மோசமான நடவடிக்கை
கனேடிய மண்ணில் சீக்கிய பிரிவினவாதத் தலைவர்கள் படுகொலையை ஒப்பிட்டு பாகிஸ்தான் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. வியாழனன்று செய்தியாளர் சந்திப்பின் போது, பாகிஸ்தான் வெளிவிவகாரச் செயலர் முஹம்மது சைரஸ் சஜ்ஜாத் காசி தெரிவிக்கையில்,
கனடா போலவே மர்மமான படுகொலைகள்… இந்தியா மீது பகிரங்கமாக குற்றஞ்சாட்டிய ஆசிய நாடு | Two Assassinations Pakistan Accuses IndiaCredit: anews
பாகிஸ்தானுக்குள் சட்டத்திற்குப் புறம்பான கொலைகளை முன்னெடுப்பது என்ற புதிய மற்றும் மோசமான நடவடிக்கையை இந்தியா நடத்தி வருவதாகக் கூறியுள்ளார்.
வெளிநாடுகளில் பாதுகாப்பாக இருந்துகொண்டு நவீன தொழிக்நுட்பத்தை பயன்படுத்தி இந்திய உளவுத்துறையினர் பாகிஸ்தான் மண்ணில் படுகொலையை முன்னெடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்களே ஆட்களை தெரிவு செய்து, பணமளித்து, குற்றவாளிகள், பயங்கரவாதிகள் மற்றும் சந்தேகத்தை ஏற்படுத்தாத அப்பாவி மக்கள் உள்ளிட்டவர்களை களமிறக்கி தங்கள் திட்டத்தை நிறைவேற்றுவதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.