நிதீஷ் வெளியேறுவார் என முன்னரே தெரியும்: சொல்கிறார் கார்கே
புதுடில்லி: ‘ இண்டியா ‘ கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதீஷ்குமார் வெளியேறுவார் என முன்னரே தெரியும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.இது தொடர்பாக கார்கே கூறியதாவது: முன்பு அவருடன் இணைந்து நாங்களும் பா.ஜ.,வை எதிர்த்தோம்.
லாலு மற்றும் தேஜஸ்வியுடன் நான் பேசும் போது, நிதீஷ்குமார் கூட்டணியை விட்டு வெளியேறப் போகிறார் என தெரிவித்தனர். அவர் கூட்டணியில் நீடிக்க வேண்டும் என விரும்பியிருந்தால் நீடித்து இருக்கலாம். ஆனால், அவர் வெளியேறிவிட்டார். இது எங்களுக்கு முன்னரே தெரியும்.
ஆனால், நாங்கள் வெளியில் எதுவும் சொல்லவில்லை. தவறாக எதாவது கூறினால், தவறான செய்தி மக்களிடம் சென்றடையும். நிதீஷ் குறித்து லாலு மற்றும் தேஜஸ்வி ஆகியோர் முன்னரே கூறியது, தற்போது உண்மையாகி உள்ளது. இவ்வாறு கார்கே கூறினார்.அரசியல் நாடகம்இதனிடையே காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நிதீஷ்குமாரின் துரோகத்தை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். ராகுலின் பயணத்தை திசை திருப்பவே பாஜ., அரசியல் நாடகம் நடத்துகிறது எனக்கூறப்பட்டு உள்ளது.ல் நாடகம் செய்கிறது.