அனிமல் படத்தை பார்த்தவுடனே அழுதுட்டேன் – பேட்டியில் வெளிப்படுத்திய விவேக் ஓபராய்.!

ன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் அனிமல். இந்தப் படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியுள்ளார்.

 

கடந்தாண்டு டிசம்பர் மாதம் வெளியான இந்தப் படத்தில் ஆணாதிக்கமும், பெண்ணடிமைத்தனமும், வன்முறையும் அதிகளவில் இருப்பதாக கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இருப்பினும், இந்தப்படம் 800 கோடிக்கு மேல் வசூலை ஈட்டியது. இந்த நிலையில், அனிமல் படத்தையும், அதில் நடித்த ரன்பீர் கபூரையும் இந்தி நடிகர் விவேக் ஓபராய் பாராட்டியுள்ளார்.

அதாவது, அனிமல் படம் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த விவேக் ஓபராய், “அனிமல் படத்தில் ரன்பீர் கபூரின் நடிப்பை பார்த்து கண்கலங்கினேன். நடிப்பு பிரமாதமாக இருந்தது.

 

இந்தப் படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டியுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன். ஏனெனில் அவர் தனது பணியில் முழு ஈடுபாட்டுடன் இருப்பவர். இதற்கு முன்பு அர்ஜூன் ரெட்டி படத்திற்கான கதையை என்னிடம் கூறினார். அதில், பல்வேறு காரணங்களுக்காக அவருடன் பணியாற்ற முடியவில்லை.

நிதி பிரச்சினையால் படம் நின்றபோது, பூர்விக சொத்தை விற்றுதான் ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தை முடித்தார். அவருடைய சினிமாவில் பலருக்கும் மாற்றுக் கருத்து இருந்தாலும், அவரது உழைப்பு, அர்ப்பணிப்பில் குறைசொல்ல முடியாது.

‘அனிமல்’ படத்தையும் சிறப்பாக எடுத்துள்ளார். படத்தை பார்த்தபோது அழ ஆரம்பித்துவிட்டேன். ரொம்ப எமோஷனல் ஆகிவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *