Ash Wednesday 2024 : கிறிஸ்தவர்களின் தவக்காலம் இன்று முதல் தொடக்கம்…!

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நிகழ்வை புனித வெள்ளி தினமாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கடைபிடித்து வருகின்றனர். அவர் அன்றிலிருந்து 3-வது நாளில் உயிர்த்தெழுந்த தினத்தை ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். அதற்கு முன்பு வரும் 40 நாட்களும், இயேசுவின் சிலுவை பாடுகளை நினைவு கூரும் வகையில் தவக்காலமாக கிறிஸ்தவ மக்கள் கடைபிடித்து வருகின்றனர்.

கிறிஸ்தவ வாழ்வின் அன்பு, அமைதி, சகிப்புத்தன்மை, மன்னிப்பு ஆகியவற்றை மேன் மேலும் உறுதிப்படுத்தும் வகையிலும் சாம்பல் புதன் என்று அழைக்கப்படும் ஆஸ்வெனஸ்டே முதல் புனித வெள்ளி வரை 40 நாட்கள் தவக்காலம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாட்கள் துக்க நாட்கள், நோன்பு நாட்கள் என்ற பெயரிலும் கடைபிடிக்கப்படுகின்றன.

தவக்காலம் முழுவதும் ஒவ்வொரு நாளும் காலை அல்லது மாலை வேளைகளில் நடைபெறும் வழிபாடுகளில் கிறிஸ்தவர்கள் பங்கேற்க வேண்டும். தவக்காலத்தின் இறுதி வாரம் வரும் ஏப்ரல் மாதம் முதல் துவங்குகிறது. அப்போது சிலுவைப் பாதை எனப்படும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

அப்போது மதுப்பழக்கம், புகைப்பிடித்தல் உள்ளிட்ட தீயப் பழக்கங்களில் இருந்து விடுவித்துக்கொள்ள தவக்காலம் உதவியாக இருக்கும். இந்நிலையில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாளாக புனித வியாழன் கடைப்பிடிக்கப்படுகிறது.

அந்த வகையில் மார்ச் 28ஆம் தேதி புனித வியாழன் அனுஷ்டிக்கப்பட உள்ளது.மார்ச் 28ஆம் தேதி அன்று இயேசுவை சிலுவையில் அறையும் நாளான புனித வெள்ளி வருகிறது. அன்றிலிருந்து 3வது நாளில் இயேசு உயிர்த்தெழும் ஈஸ்டர் பண்டிகை மார்ச் 31ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *