அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் படம் புளூஸ்டார்

சென்னை: காதல் திருமணம் செய்த அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன் ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் படம், ‘புளூஸ்டார்’.
முக்கியமான வேடங்களில் சாந்தனு, பிரித்வி, திவ்யா துரைசாமி நடித்துள்ளனர். இயக்குனர் பா.ரஞ்சித் உதவியாளர் ஜெய்குமார் இயக்க, கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார்.
தமிழ் அழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அறிவு, உமாதேவி பாடல்கள் எழுதியுள்ளனர். லெமன் லீப் கிரியேஷனுக்காக ஆர்.கணேஷ் மூர்த்தி, ஜி.சவுந்தர்யா, நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் பா.ரஞ்சித் சேர்ந்து தயாரித்துள்ளனர். வரும் 25ம் தேதி திரைக்கு வரும் இப்படத்தை சக்தி பிலிம் பேக்டரி சார்பில் சக்திவேலன் வெளியிடுகிறார்.
இன்றைய நமது இளைஞர்களின் வாழ்க்கையில் நீங்காத இடத்தை பிடித்திருக்கும் கிரிக்கெட் மற்றும் விளையாட்டைச் சுற்றி நடக்கும் நட்பு, காதல், மோதல், ஆகிய விஷயங்களை ஜனரஞ்சக முறையில் சொல்லும் படமாக உருவாகியுள்ளது என்றார், பா.ரஞ்சித்.