தேசிய விமான சேவை நிறுவனத்தை விற்க ஆசிய நாடு முடிவு
கடனில் மூழ்கியுள்ள தேசிய விமான சேவை PIA நிறுவனத்தை விற்க பாகிஸ்தான் நாட்டின் காபந்து அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
பாகிஸ்தானில் பொதுத்தேர்தல் அடுத்த வாரம் இடம்பெறவுள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பொதுத்தேர்தலின் தேர்தலுக்கு பின்னர், புதிதாக உருவாகும் அரசாங்கம் இந்த முடிவை முன்னெடுத்து செல்லலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம்
சர்வதேச நாணய நிதியத்துடன் முன்னெடுக்கப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் நஷ்டத்தில் இயங்கும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை மாற்றியமைக்க ஜூன் மாதம் ஒப்புக்கொண்டுள்ளதுடன், PIA நிறுவனத்தை தனியார்மயமாக்க பாகிஸ்தான் அரசாங்கம் முடிவு செய்திருந்தது.
இதற்கமைய, தற்போது PIA நிறுவனத்தினை விற்பனை செய்வது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் 98 சதவிகிதம் முடிவடைந்துள்ளதாகவும், அமைச்சரவை ஒப்புதல் அளித்ததும் எஞ்சிய 2 சதவிகித நடவடிக்கைகள் முடிக்கப்படும் என்றும் அமைச்சர் ஃபவாத் தெரிவித்துள்ளார்.