சமையல் எண்ணெய் விற்ற நிறுவனத்தை ஐடி நிறுவனமாக மாற்றிய அசிம் பிரேம்ஜி.. வியக்க வைக்கும் பயணம்..!

பிரபல இந்திய தொழிலதிபரும், பெரும் நன்கொடையாளரும், விப்ரோவின் முன்னாள் தலைவருமான அசிம் பிரேம்ஜி தனது நிறுவனத்தை உலக அளவில் செல்வாக்கு உரிய மல்டி நேஷனல் கம்பெனியாக உருவாக்கியதில் முக்கியப் பங்கை வகித்தார்.
1966 ஆம் ஆண்டில் அவரது தந்தை காலமான பின்னர் கம்பெனியின் நிர்வாகம் அசிம் பிரேம்ஜியிடம் வந்தது.
1980களில் அந்த நிறுவனத்தை விப்ரோ என பெயர் மாற்றி ஐடி துறையில் சென்டினல் கம்ப்யூட்டர் கார்ப்பொரேஷன் என்ற நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து மினி கம்ப்யூட்டர்களை தயாரிக்கத் தொடங்கினார். 78 வயதான அசிம் பிரேம்ஜி அவரது பயணத்தில் பல்வேறு சாதனைகளை படைத்தார். அசிம் பிரேம்ஜியின் மனைவி யாஸ்மின் பிரேம்ஜி டிசைனர் ஜர்னல் Inside Outside-ன் முன்னாள் உதவி எடிட்டர் ஆவார். அவரது அறப்பணிகளுக்காக மிகவும் அறியப்பட்டார். நாட்டின் பணக்காரர்களில் ஒருவரான அசிம் பிரேம்ஜி கடந்த இரண்டாண்டுகளில் விப்ரோவின் பங்குகள் 42 சதவீத சரிவை சந்தித்தார். புளூம்பெர்க் பில்லியனர் பட்டியலில் தற்போது ஆறாவது இடத்தில் அசிம் பிரேம்ஜி உள்ளார்.
அவரது நிகர சொத்து மதிப்பு 24 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இந்திய மதிப்பில் ரூ.1,99,997 கோடி. அசிம் பிரேம்ஜி பவுண்டேஷன் அறக்கட்டளையின் இயக்குநராக உள்ள யாஸ்மின் பிரேம்ஜியின் நிகர சொத்து மதிப்பு ரூ.1,14,400 கோடி ஆகும். இருவரது சொத்துகளும் சேர்த்து ரூ.3,14,397 கோடி ஆகும். 1945 ஆம் ஆண்டில் முகமது ஹாஷிம் பிரேம்ஜி வெஸ்டர்ன் இண்டியன் வெஜிடபிள் புராடக்ட் நிறுவனத்தை அல்மனெர் என்ற சிறிய நகரத்தில் தொடங்கினார். சூரியகாந்தி பூ வனஸ்பதி, லாண்டிரி சோப் போன்ற தயாரிப்புகளை அவரது நிறுவனம் செய்து வந்தது.
1966 ஆம் ஆண்டில் அவரது தந்தையின் மறைவுக்குப் பின்னர் அசிம் பிரேம்ஜி ஸ்டான்போர்டு பல்கலைக்கழக இஞ்சினியரிங் படிப்பை நிறுத்திவிட்டு குடும்பத் தொழிலைக் கையில் எடுத்தார். அதன் பின்னர் நிறுவனம் பல்வேறு துறைகளில் பரந்து வளர்ந்தது. 2019 ஆம் ஆண்டில் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகி தனது மகன் ரிஷாத் பிரேம்ஜியிடம் பொறுப்புகளை அளித்தார். விப்ரோ அமெரிக்காவினி சிலிக்கான் வேலியில் ஒரு innovation center நடத்துகிறது.
புதிய தொழில்நுட்பங்களை உருவாக்க பல்வேறு ஸ்டார்ட்அப்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. அசிம் பிரேம்ஜி தனது செல்வத்தை தி ஸ்லீப் கம்பெனி, பர்பில், ஸ்பாட் டிராஃப்ட், குளோபல்பீஸ், ஐசெர்டிஸ், கிவா உள்ளிட்ட பல ஸ்டார்ட்அப் முதலீடுகள் மூலம் பெருக்கியுள்ளார். விப்ரோவை புதிய உயரத்துக்கு கொண்டு செல்வதில் அவர் செய்த சாதனைகளுக்கு அப்பால், அசிம் பிரேம்ஜி தனது பரோபகார முயற்சிகளுக்கு சமமாக புகழ் பெற்றவர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *