முழு கொள்ளளவை எட்டிய வைகை. 5 மாவட்ட கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..!!
வைகை அணையின் நீர்மட்டம் கடந்த நவம்பர் இறுதியில் 70.5 அடியை எட்டியது (மொத்த உயரம் 71 அடி).
இதையடுத்து ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்ட பாசனம் மற்றும் குடிநீர் திட்டங்களுக்கு அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டது.பொதுவாக அணையின் நீர்மட்டம் வெளியேற்றும் காலத்தில் குறையும்.
ஆனால் இம்முறை சீராக தண்ணீர் வருவதால் நீர்மட்டம் 69 அடியாக மாறியது.இதையடுத்து நீர்மட்டத்தை 71 அடியாக உயர்த்த நீர்வளத்துறை முடிவு செய்தது.தொடர்ந்து தண்ணீர் தேக்கி வருவதால் அணை இன்று அதிகாலை 4.45 மணியளவில் தனது முழு கொள்ளளவான 71 அடியை எட்டியது.
இதையடுத்து அணையில் இருந்து உபரி நீரை வெளியேற்ற 3 முறை அபாய சங்கு ஒலிக்கப்பட்டது.மேலும் அணைக்கு வந்த 3 ஆயிரத்து 106 கன அடி நீர் உபரியாக திறந்து விடப்பட்டது.
அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், தண்ணீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருவதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனவே தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட கடலோர மக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என்று கூறினர்.முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136.90 அடியாகவும், நீர்வரத்து வினாடிக்கு 823 கன அடியாகவும், வெளியேற்றம் 511 கன அடியாகவும் உள்ளது.