இந்த வாரமாவது நினைத்தது நடக்குமா..? இருவரில் யார் எலிமினேட்..? வெய்ட்டிங்கில் பிக் பாஸ் ரசிகர்கள்..!!
விஜய் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்பட்டு வருவது பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக சென்று வரும் நிலையில் யாரும் எதிர்ப்பாராத வகையில் பூர்ணிமா 16 லட்ச பணப்பெட்டியுடன் வீட்டிலிருந்து வெளியேறினார்.
இதனிடையே வார இறுதியில் யார் எலிமினேட் செய்யப்படுவார்கள் என்று பிக் பாஸ் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் குறைந்த வாக்குகள் பெற்று இருப்பது மாயா மற்றும் அவருக்கு அடுத்ததாக விஜய்.
ஆக இந்த வாரத்தின் இறுதியில் இவர்கள் இருவரில் ஒருவர் எலிமினேட் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. அதேநேரம் பலமுறை மாயா குறைந்த வாக்குகள் பெற்ற போதும் எலிமினேட் செய்யப்படவில்லை என்பதால் இந்த வாரம் என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.