27 வயதில் மிரளவைக்கும் ஜான்வி கபூர் சொத்து மதிப்பு.., இத்தனை கோடிகளா?
போனி கபூர் மற்றும் ஸ்ரீதேவிக்கு மகளாக பிறந்த ஜான்வி கபூர் பாலிவுட் மற்றும் டோலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.
இவர் சமீபத்தில் அம்பானி மகன் திருமணத்தில் கலந்துகொண்டு பாப் பாடகி ரிஹானாவுடன் ஆட்டம் போட்டிருந்தார்.
இன்ஸ்டாகிராம் நேற்று முடங்கிய நிலையில், ட்விட்டரில் கவர்ச்சியான போட்டோவை ஷேர் செய்திருந்தார்.
கவர்ச்சி புயலாக இன்ஸ்டாவை கலக்கி வரும் ஜான்வி கபூர் 23 மில்லியன் ரசிகர்களை கொண்டிருக்கிறார்.
ஜூனியர் என்டிஆரை தொடர்ந்து ராம் சரண் படத்திலும் ஜான்வி கபூர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்
ராம்சரண் 16வது படத்தில் ஜோடியாக கமிட் ஆகி உள்ள ஜான்வி கபூர் ஒரு படத்துக்கு ரூ. 5 கோடி சம்பளம் வாங்குகிறாராம்.
இந்நிலையில் ஜான்வி கபூர் இன்று தனது 27-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
27 வயதில் நடிகை ஜான்வி கபூர் 68 கோடிக்கு அதிபதியாக உள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
மேலும், ஜான்வி கபூரிடம் சொந்தமாக இரு சொகுசு கார்கள் உள்ளன.