இன்று அறிமுகமாகும் Ather Rizta.. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள் என்ன?

பெங்களூரை அடிப்படையாக கொண்டு இயங்கி வரும் இந்தியாவின் முன்னனி எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனமான Ather Energy, தங்களுடைய புதிய Rizta எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஏப்ரல் 6-ம் தேதி அறிமுகப்படுத்தவுள்ளது. குடும்ப ஸ்கூட்டர் என்ற விளம்பரத்தோடு வரவுள்ள இந்த எலெக்ட்ரிக் வாகனம் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யுமா?

புதிய Ather Rizta எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் என்ன எதிர்பார்க்கலாம்?

Ather Rizta எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் குடும்ப ஸ்கூட்டர் என்றே அழைக்கப்படுகிறது. இதற்கு முன்பு அறிமுகமான வாகனங்களை விட இது பெரிய வடிவமைப்பை கொண்டுள்ளது. இதன் டீஸர் மற்றும் சோதனை ஓட்ட வீடியோக்களை வைத்து பார்க்கும் போது ஸ்போர்டிவான Ather 450 சீரிஸ் போல் பெர்ஃபார்மன்ஸ் முக்கியத்துவம் வாய்ந்த ஸ்கூட்டராக Rizta இருக்காது என்றே தெரிகிறது.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் குடும்ப உறுப்பினர்களுக்கென்று பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. அவர்களின் வசதி, பயன்படுத்தும் தன்மை ஆகியவற்றிற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. சுருக்கமாக சொன்னால் இந்தியா மார்க்கெட்டில் உள்ள ஸ்கூட்டரில் என்னவெல்லாம் எதிர்பார்ப்போமோ அதெல்லாம் இதில் நிச்சயம் இருக்கும்.

தினசரி பயன்பாடு பற்றி கூறினோம் அல்லவா! அதற்கேற்றார்ப் போல் இந்தப் பிரிவிலேயே மிகப்பெரிய இருக்கையை இந்த ஸ்கூட்டர் கொண்டுள்ளது. இதன் புகைப்படங்களையும் Ather நிறுவனத்தின் சிஇஓ தருன் மேத்தா சமீபத்தில் இணையத்தில் பகிர்ந்திருந்தார். இதுதவிர இருக்கைக்கு கீழ் உள்ள இடவசதியும் மற்ற ஸ்கூட்டர்களை விட இதில் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையால் கடைகளுக்கு செல்லும் போது நாம் வாங்கும் பொருட்களை இதில் எளிதாக நிரப்பிக்கொள்ள முடியும்.

Ather Rizta பவர்ட்ரைய்ன் மற்றும் சிறப்பம்சங்கள் :

இதுவரை Ather Rizta எலக்ட்ரிக் ஸ்கூட்டர் குறித்து இதுவரை எந்தவொரு தகவல்களையும் அதிகாரப்பூர்வமாக நிறுவனத் தரப்பிலிருந்து கூறப்படவில்லை என்றாலும் Ather நிறுவனத்தின் மற்ற ஸ்கூட்டர்களில் உள்ள வசதிகள் இதிலும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் பேனல், தொடுதிரை வசதிகள், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி போன்றவை Rizta ஸ்கூட்டரில் சேர்க்கப்பட்டிருக்கலாம் என நமக்கு வந்த தகவல்கள் கூறுகின்றன. மேலும் பல்வேறு வித்தியாசமான டிரைவிங் மோட், விரைவான சார்ஜிங், வழிகாட்டும் வசதி போன்றவையும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் உள்ளது.

Ather நிறுவனத்தின் மற்ற ஸ்கூட்டர் மாடல்களை விட Rizta-வின் பெர்ஃபார்மன்ஸ் மற்றும் ரேஞ்ச் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. இதற்கு முக்கிய காரணம் புதிய பேட்டரி மற்றும் மோட்டார் கட்டமைப்பு. ஆனால் இந்த தகவல்கள் குறித்து Ather நிறுவனத் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு அதிர்காரப்பூர்வ தகவல்களும் தெரிவிக்கப்படவில்லை என்பதையும் உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

Ather நிறுவனத்தின் Community Day இன்று நடைபெறுகிறது. அன்றுதான் Rizta எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஆகையால் ஸ்கூட்டரின் முழுமையான சிறப்பம்சங்கள், வசதிகள், வடிவமைப்பு, தோற்றம் போன்றவை அன்றைய நாளே நமக்கு தெரிய வரும். Rizta ஸ்கூட்டரை அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன மார்க்கெட்டில் தனது இருப்பை மேலும் வலுப்படுத்தவுள்ளது Ather.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *