பாலிவுட்டில் அஸ்திவாரம் போட்ட அட்லீ.. மும்பையில் பிரம்மாண்ட ஆபிஸ்.. காரணம் இதுதான்!
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி நடிப்பில் இந்தியில் வெளியானது ஜவான் திரைப்படம். ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் கோடிகளில் வசூலை அள்ளிக் குவித்து இன்று வரை முதலிடத்தில் உள்ளது.
பாலிவுட்டில் இயக்கிய முதல் படமே மாஸ் ஹிட் கொடுத்த நிலையில், பாஸ்ட்மெண்டை ஸ்டாரங்காக போட்டுவிட்டார் என்றே கூறலாம். ஜவானை முடித்த கையோடு, தனது தயாரிப்பு நிறுவனம் சார்பில் ‘தெறி’படத்தின் இந்தி ரீமேக்கை இயக்கி வருகிறார் அட்லீ. இந்த படத்தில் பாலிவுட் நடிகர் வருண் தவான் மற்றும் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர்.
ஜவான் படத்தை இயக்கி வந்த நிலையில் சில மாதங்களாக மும்பையிலேயே முகாமிட்டிருந்த அட்லீ மும்பையில் ஏற்கனவே வீடு வாங்கியுள்ள நிலையில், தற்போது அங்கே 40 கோடி செலவில் 10 ஆயிரம் சதுரடியில் அலுவலகம் ஒன்றை உருவாக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து பாலிவுட்டில் பல படங்களை தயாரித்து மிகப்பெரிய லாபத்தை ஈட்டுவதற்கான அத்தனை வழிகளையும் அட்லீ முயற்சித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.
காப்பி இயக்குநர் என எவ்வளவுதான் அட்லீ ட்ரோல் செய்யப்பட்டிருந்தாலும், அவரின் மேக்கிங்கை பார்த்து மிரண்டு போய் முன்னணி நடிகர்கள் பலர் அவரது இயக்கத்தில் நடிக்க காத்து கிடக்கின்றனர். ஷாருக்கானுக்கு ஜவான் படத்தின் மூலம் பெரிய சம்பவம் செய்த அட்லீ, அடுத்து ஷாருக்கானையும், விஜயையும் வைத்து பான் வேல்ர்ட் படத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் கசிந்துள்ளது.
அட்லீயின் இந்த அசுர வேக வளர்ச்சியை பார்த்து பாலிவுட்டில் பல பிரபலங்களே பொறாமைப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது அவர்களை அங்கே சமாளிக்கவே தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி பல முன்னணி நடிகர்களை தனது நண்பர்களாக மாற்றும் முயற்சியில் அட்லீ ஈடுபட்டு வருவதாகவும். அட்லீயின் இந்த வளர்ச்சிக்கு யஷ் சோப்ரா, கரண் ஜோஹர் போன்ற பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் தடையாக இருக்குமா? என்கிற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.