பக்தர்களின் கவனத்திற்கு! திருப்பதி தேவஸ்தானத்தின் முக்கிய அப்டேட்..!
திருமலை திருப்பதி ஏழுமலையானை ஆண்டுதோறும் உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்யும் புகழ்பெற்ற கோவிலாக உள்ளது.
கோவிலில் தரிசனம் செய்வதற்கு வரும் பக்தர்கள் ஆன்லைன் வாயிலாக டிக்கெட்டுகளை பதிவு செய்து கொள்வதற்கும், கோயில் தொடர்பான விபரங்களை அறிந்து கொள்வதற்கும் அதிகாரப்பூர்வ இணையதளம் ஒன்று பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது தேவஸ்தான நிர்வாகம் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் பெயரை மாற்றி உள்ளது.
ஒரே அமைப்பு ஒரே இணையதளம் ஒரு மொபைல் ஆப் திட்டத்தின் கீழ் தேவஸ்தானத்தின் ஆன்லைன் முன்பதிவு இணையதளம் ttdevasthanams.ap.gov.in என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது மட்டும் இன்றி இந்த இணையதளத்தில் கோவிலின் தல வரலாறு, ஆர்ஜித சேவைகள், தரிசன நேரம், போக்குவரத்து விவரங்கள் மற்றும் பிற வசதிகளும் இணைக்கப்பட்டுள்ளது. இணையதளத்தின் வடிவமைப்பு மற்றும் பராமரிப்பு சேவைகளை திருப்பதி தேவஸ்தானத்தின் ஐடி துறையுடன் இணைந்து ஜியோ நிறுவனம் க்ளைவுட் சிஸ்டம் முறையில் செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.