மக்களே கவனம்..! தமிழகத்தில் அம்மை நோய் பரவும் அபாயம்..!
தமிழகத்தில் கோடை காலம் ஆரம்பமான நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக பிப்ரவரி மாதத்தில் இருந்தே வெயில் அதிகரிக்க தொடங்கி விட்டது. இனிவரும் நாட்களில் இன்னும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் வறண்ட வானிலை நிலவும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வெயில் தாக்கம் அதிகமாக இருக்கிறது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அந்தந்த மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறியுறுத்தி உள்ளோம். சென்னையை பொறுத்த வரை சென்னை மாநகராட்சி விழிப்புணர்வு ஏற்படுத்தும்.
அதுமட்டுமின்றி அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளும் வெப்ப செயல் திட்டம் (heat action plan) உருவாக்கி வெயில்தொடர்பான நோய்களை கண்கணிக்க உத்தரவிட்டு உள்ளோம். மேலும் அனைத்து மருத்துவமனைகளிலும் நோயாளிகளுக்கு தேவையான குடிநீர் வைக்கவும், வெயில் காலத்தில் ஏற்படும் நோய்களை தடுக்க தேவையான அனைத்து உபகரணங்களும் தயார் நிலையில் வைக்க அறியுறுத்தி உள்ளோம்.
வெயில் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வருபவரின் முழு தகவல்களை பொது சுகாதாரத்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.