சந்தாதாரர்கள் கவனத்திற்கு..! திருமணத்திற்கு பிறகு இதை செய்யாவிட்டால் பணம் கிடைக்காது..!!

திருமணமான பிறகு பிஎஃப் சந்தாதாரர்கள் அவர்களுடைய கணக்கில் மனைவியின் பெயரை நாமினியாக சேர்ப்பது முக்கியம்.
அவ்வாறு செய்யாவிட்டால் என்ன நடக்கும் என்பது குறித்து பார்க்கலாம். PF என்பது மிக முக்கியமான விஷயம். இது சேமிப்பு மட்டுமல்லாமல் பிற்காலத்தில் நல்ல வருமானத்தையும் கொடுக்கிறது. இது நம்முடைய ஓய்வூதியத்தை பாதுகாக்கிறது. மரணமடைந்தால் அது அவர்களுடைய குடும்பத்திற்கும் பயன் அளிக்கிறது. இதில் நாம் செய்யும் ஒவ்வொரு சிறிய தவறும் முழு சேம்பையும் முடக்கிவிடும் அபாயம் உள்ளது.
நிறைய பேர் இந்த தவறு செய்கிறார்கள். அதாவது திருமணமான உடனே பிஎப் மற்றும் இபிஎஸ் விதிகள் மாற்றப்படுகிறது. அது குறித்து விதிமுறைகள் நிறைய பேருக்கு தெரிவதில்லை. திருமணத்திற்கு பிறகு இபிஎப் மற்றும் இபிஎஸ் திட்டத்தில் நியமனம் ரத்து செய்யப்படலாம். இது இபிஎஃப்4 திட்ட விதிகள் 1952ல் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விதிமுறைப்படி திருமணத்திற்கு முன்பாக எந்த ஒரு உறுப்பினர் நியமனமும் திருமணத்திற்கு பிறகு செல்லாது என்று நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
திருமணத்திற்கு பிறகு மீண்டும் நாமினேட் செய்ய வேண்டும். திருமணத்திற்கு முன் இபிஎஸ் மற்றும் இபிஎப் பதிவு தானாகவே திருமணத்திற்கு பிறகு ரத்து செய்யப்படும். எனவே திருமணத்திற்கு பிறகு மனைவி பெயரை நாமினியாக சேர்க்க வேண்டும். இவ்வாறு மனைவி பெயரை நாமினியாக சேர்ப்பதற்கு இபிஎப்ஓ இணையதளத்திற்கு சென்று சேர்க்க வேண்டும்