Attukal Rasam: இடிச்ச ஆட்டுக்கால் ரசம்… தீராத நோயும் தீருமாம்
ரசம் என்றாலே ஒரு தனி சுவை அதற்காகவே இருக்கும். அதிலும் ஆட்டுக்கால் ரசம் பற்றி சொல்லவே தேவையில்லை.
இந்த ஆட்டுக்கால் ரசமானது உடலுக்கு ஏராளமான நன்மையை அளித்து வருகிறது. உடலில் ஏற்படும் ஜலதோஷம், இருமல், சளி போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்குகிறது.
எனவே ஆட்டுக்கால் வைத்து எப்படி இடிச்ச ஆட்டுக்கால் ரசம் செய்யலாம் என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ஆட்டுக்கால்
சின்ன வெங்காயம்
எண்ணெய்
பெரிய வெங்காயம்
தக்காளி
கறிவேப்பிலை
மஞ்சள் தூள்
இஞ்சி பூண்டு
கொத்தமல்லி இலை
பட்டை
கிராம்பு
ஏலக்காய்
மிளகு
சீரகம்
பச்சை மிளகாய்
தண்ணீர்
செய்முறை
முதலில் ஆட்டுக்காலை உரலில் வைத்து இடித்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய், பெரிய வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, மஞ்சள் தூள் மற்றும் இடித்து வைத்த ஆட்டுக்கால் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
பின் ஒரு மிக்ஸியில் சின்ன வெங்காயம், இஞ்சி பூண்டு, கொத்தமல்லி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், மிளகு, சீரகம், பச்சை மிளகாய் மற்றும் தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
அரைத்து வைத்த மசாலாவை வதக்கி வைத்துள்ள ஆட்டுக்காலுடன் தேவையானளவு உப்பு சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
இறுதியாக அனைத்தும் வெந்தவுடன் தட்டி வைத்த மிளகு சீரகம் மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கினால் இடிச்ச ஆட்டுக்கால் ரசம் ரெடி!