10 லட்சம் ரூபாய்க்கு கீழ் இந்தியாவில் கிடைக்கும் ஆட்டோமேட்டிக் கார்கள்

இந்தியாவில் அண்மை காலமாக ஆட்டோமேட்டிக் கார்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. இந்தியாவின் டிராஃபிக் சூழல்களில் ஆட்டோமேட்டிக் கார்கள் பயன்படுத்துவதற்கு எளிதாக இருப்பதால் புதிதாக கார் வாங்குபவர்களின் முதல் விருப்பமாக இவை இருக்கின்றன. அந்த வகையில் இந்தியாவில் 10 லட்சம் ரூபாய்க்கு கீழ் கிடைக்கும் ஆட்டோமேட்டிக் கார்களின் பட்டியலை இங்கே காணலாம்.

மாருதி சுசுகி இக்னிஸ்: மாருது சுசுகி இக்னிஸ் கார்கள் எஸ்யூவி ரக கார் இல்லை என்றாலும் அதில் இருக்கும் அனைத்து வசதிகளும் இருப்பதால் இதனை மைக்ரோ எஸ்யூவி என்கின்றனர் கார்கள் சந்தையில் இருக்கும் நிபுணர்கள். நெக்ஸா ரீட்டெயில் கடைகள் மூலம் இது விற்பனை செய்யப்படுகிறது. 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் கிடைக்கும் இந்த கார்கள் டெல்டா, ஸெடா மற்றும் ஆல்பா வகைகளில் விற்கப்படுகிறது. இதன் எக்ஸ் ஷோரூம் விலை 6.93 லட்சம் ரூபாய் முதல் 8.16 லட்சம் ரூபாய் வரை நிர்ணயிக்கப்படுகிறது.

டாடா பன்ச்: இந்தியாவில் கிடைக்கும் எஸ்யூவி ரக கார்களில் முக்கியமானது டாடா பன்ச். இது மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரண்டு வகைகளிலும் கிடைக்கிறது.டாடா பன்ச் கார்களில் 12 வகைகள் உள்ளன. இதில் 11 வகையான கார்கள் ரூ.10 லட்சத்திற்கும் கீழ் விற்பனையாகின்றன. 7.50 லட்சம் முதல் 9.35 லட்சம் ரூபாய் வரை இந்த வகை கார்களை வாங்கலாம்.

ஹூண்டாய் எக்ஸ்டர்: 2023ஆம் ஆண்டு காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் என அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காரும் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரண்டு வகைகளிலும் கிடைக்கிறது. 6 வகைகளில் இந்த கார்கள் கிடைக்கின்றன. 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் கொண்ட கார் 10 லட்சம் ரூபாய்க்கு கீழ் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் – சிஎன்ஜி என இரண்டு முறையிலும் இதனை பயன்படுத்தலாம்.

மாருதி சுசுகி ஃபிரான்க்ஸ்: மாருதி நிறுவனம் 2023இல் அறிமுகம் செய்த கார் இது. நெக்ஸா ரீட்டெயில்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. பலேனோ வகை கார்களை அடிப்படையாக கொண்டு இது வடிவமைக்கப்பட்டுள்ளது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என இரண்டு வகைகளிலும் கிடைக்கிறது. இந்த கார் 8.88 லட்சம் முதல் 9.2 லட்சம் வரை கிடைக்கின்றன.

ரெனால்ட் கைகர்: பிரான்ஸை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட் இந்தியாவில் அறிமுகம் செய்த ஒரே எஸ்யூவி ரக கார் ரெனால்ட் கைகர். மேனுவல் மற்றும் கிளட்ச்லெஸ் ஆட்டோமேட்டிக் என இரண்டு வகையுமே உள்ளன. இந்த கார் அதன் வகையை பொறுத்து 7.10 லட்சம் ரூபாயில் இருந்து 9.53 லட்சம் ரூபாய் வரை கிடைக்கின்றன.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *