தடிப்புச்சொறி தவிர்ப்போம்
நன்றி குங்குமம் டாக்டர்
தோல் படைகள் சிவப்பாகவும் சில சமயம் அரிக்கும் புடைப்புகளாகவும் இருக்கும். பொதுவாக இது ஒரு மருந்து அல்லது உணவு ஒவ்வாமையால் உண்டாகும் எதிர்வினையால் ஏற்படுகிறது.
ஒவ்வாமை எதிர்வினையின் காரணமாக உடல் வேதிப்பொருட்களை வெளிவிடுவதால் தோல் புடைப்புகளாக வீங்குகிறது. பிற ஒவ்வாமை உள்ளவர்களுக்கு மற்றவர்களை விட புடைப்புகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். தொற்று அல்லது மன அழுத்தம் பிற காரணங்களில் அடங்கும்.
கடும் தடிப்புச்சொறி
ஆறு வாரத்திற்குள் முழுமையாக மறைந்துபோகும் வீக்கம், கடும் தடுப்புச் சொறி எனப்படும். ஒவ்வாமை உண்டாக்கும் பொருளை எதிர்கொண்ட சில நிமிடங்களிலேயே கடும் தடிப்புச்சொறி உடனடியாக வெளிப்படும். இது பல வாரங்கள் நீடிக்கலாம். ஆனால் பொதுவாக ஆறு வாரத்தில் தடிப்புகள் மறைந்து போகும்.
நீடித்த தடிப்புச்சொறி
(சாதாரணத் தடிப்புச்சொறி) ஆறு வாரத்திற்கும் மேல் நீடிக்கும் வீக்கம் நீடித்தத் தடிப்புச்சொறி எனப்படும். சில கடுமையான நீடித்த நோய் 20 ஆண்டுகளுக்கும் மேல் நீடித்து வந்துள்ளது.
நோயறிகுறிகள்
தோல் படைகள் சிவப்பாகவும் சிலசமயம் அரிக்கும் புடைப்புகளாகவும் இருக்கும். பொதுவாக இது ஒரு மருந்து அல்லது உணவு ஒவ்வாமையால் உண்டாகும் எதிர்வினையால் ஏற்படுகிறது.
ஒவ்வாமை எதிர்வினையின் காரணமாக உடல் வேதிப்பொருட்களை வெளிவிடுவதால் தோல் புடைப்புகளாக வீங்குகிறது. பிற ஒவ்வாமை உள்ளவர்களுக்கு மற்றவர்களை விட புடைப்புகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். தொற்று அல்லது மனல்அழுத்தம் பிற காரணங்களில் அடங்கும்.