அட! உணவில் தினமும் நெய் சேர்ப்பதால் இத்தனை பயன்களா.?!

ந்திய உணவுகளில் முக்கிய பொருளாகவும், சுவையூட்ட கூடியதாகவும் நெய் விளங்குகிறது. வெண்ணையைக் காட்டிலும் நெய்யில் பலன்கள் அதிகம்.

நெய் பொதுவாக ஊட்டச்சத்துக்களின் சக்தி நிலையம் என்று கருதப்படுகிறது. 100 மில்லி நெய்யில் 883 கலோரிகள் உள்ளன.

இதில் புற்றுநோயை எதிர்க்கும் தன்மைகள் உள்ளதாக அறியப்பட்டது. ஆயுர்வேத முறை மருத்துவத்தில் நெய்க்கு சிறப்பு பங்கு உண்டு. இது மூளையில் உள்ள நரம்பு மண்டலத்திற்கு சாதகமான பலன்களை தருவதாக கண்டறியப்பட்டுள்ளது.

பெருங்குடலின் ஆரோக்கியத்தை பராமரிப்பதில் நெய்க்கு முக்கிய பங்கு உண்டு. அது மலச்சிக்கலை போக்குகிறது. எரிச்சல் கொண்ட குடல் நோய்க்கு (IBS) சிறந்த மருந்தாக கருதப்படுகிறது. நெய்யில் உயிரகந் தடுப்பிகள் (Antioxidants) நிறைந்திருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. அரிக்கும் தோலழற்சி நோய்க்கு (Eczema) மருந்தாக பயன்படுகிறது. நெய்யில் உள்ள கொழுப்பு அமிலங்கள் ஜீரணிப்பதற்கு எளிதானவை. மற்ற உணவுகளிலிருந்து வைட்டமின்களையும் தாதுக்களையும் உறிஞ்சுவதற்கு உதவுகின்றது.

நெய்யில் உள்ள வைட்டமின் ஈ, நமது தோலை ஈர பதத்துடனும், மென்மையாகவும் வைத்திருக்க உதவும். நெய் மூக்கடைப்பை போக்க வல்லது. இதயத்திற்கு நல்லது. கேசம் ஆரோக்கியமாகவும் அடர்த்தியாகவும் இருப்பதற்கு உதவுகிறது. நெய்யில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களை கல்லீரல் ஆற்றலாக மாற்றுகிறது.

நெய்யில் உள்ள லினோலிக் அமிலம் உடல் எடையைக் குறைக்க உதவி புரிகிறது. இதனுடன் ஆரோக்கியமான உணவு பழக்கமும், உடற்பயிற்சியும் இணைந்து எடை குறைப்பை துரிதப்படுத்துகிறது. தீக்காயங்களுக்கு மருந்தாக நெய்யை பயன்படுத்தலாம். லாக்டோஸ் செரிமான கோளாறு உள்ளவர்கள் கூட நெய்யை பயன்படுத்தலாம்.

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது போல இவ்வளவு சிறப்பு வாய்ந்த நெய்யையும் அளவாகத்தான் பயன்படுத்த வேண்டும். நாளொன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டிக்கு மேல் பயன்படுத்த வேண்டாம். செரிமான கோளாறுகள் உள்ளவர்கள், இதயத்தில் பிரச்சனைகள் உள்ளவர்கள், வயதானவர்கள் ஆகியோர் மருத்துவரின் ஆலோசனைக்கு ஏற்ப இதனை பயன்படுத்தலாம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *