மணல் சிற்பம் மூலம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு!

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், நாட்டில் நடக்கும் மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களாக செதுக்கி மக்களின் மனங்களில் தாக்கத்தை உண்டாக்கி வருகிறார்.

இந்நிலையில், வரும் பாராளுமன்ற தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்க தகுதி பெற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் ஒடிசா கடற்கரையில் மணல் சிற்பம் வரைந்து வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி உள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் வேட்பாளர்கள் தேர்வு, கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது,

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *