ரவீந்திர ஜடேஜாவை விட அக்சர் படேல் டி20 கிரிக்கெட்டில் சிறந்த வீரர் என்று தெரிவித்த பார்திவ் பட்டேல்

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ள 2022 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் நோக்கத்துடன் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா விளையாடி வருகிறது.

அதில் முதல் 2 போட்டிகளில் வென்ற இந்தியா ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியுள்ளது. இந்த தொடரில் சிவம் துபே, ஜெயஸ்வால் போன்ற இளம் கிரிக்கெட் வீரர்கள் சிறப்பாக விளையாடி உலகக் கோப்பையில் இடம் பிடிக்க போராடி வருகின்றனர்.

அந்த வரிசையில் ஓரளவு அனுபவமிகுந்த அக்ஸர் பட்டேல் சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டராக விளையாட போராடி வருகிறார். அதில் இந்தூரில் நடைபெற்ற 2வது போட்டியில் 2 விக்கெட்கள் எடுத்து வெற்றியில் முக்கிய பங்காற்றிய அவர் ஆட்டநாயகன் விருதையும் என்று அசத்தியுள்ளார். மேலும் ஒட்டுமொத்த டி20

கிரிக்கெட்டில் 2000+ ரன்கள் மற்றும் 200+ விக்கெட்கள் இந்திய வீரர் என்ற ரவீந்திர ஜடேஜாவின் சாதனையையும் அவர் சமன் செய்தார்.

ஜடேஜாவை விட பெஸ்ட்:
கடந்த 2023 உலகக் கோப்பையில் தேர்வாக தயாராக இருந்த அவர் காயமடைந்ததால் கடைசியில் அஸ்வின் தேர்வானார். அதே போல தற்போது ஓரளவு சிறப்பாக செயல்பட்டாலும் ஜடேஜா இருப்பதால் அவருக்கு டி20 உலகக் கோப்பையில் வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமாகவே இருக்கிறது. இந்நிலையில் டி20 கிரிக்கெட்டில் பவர் பிளே உட்பட அனைத்து நேரங்களிலும் பந்து வீசுவதில் ஜடேஜாவை விட அக்சர்

பட்டேல் திறமையானவர் என்று பார்த்தீவ் படேல் கூறியுள்ளார்.

எனவே அக்சர் படேலுக்கு உலக கோப்பையில் முன்னுரிமை வழங்கலாம் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் பேசியதற்கு பின்வருமாறு. “டி20 கிரிக்கெட்டில் அக்சர் பட்டேல் நிறைய வேரியசன்களை கொண்டு வருவார். அவர் ஒரு பரிமாணமாக பந்து வீச மாட்டார். எந்த இடத்திலும் அவர் பேட்டிங் செய்யக் கூடியவர்”

“இந்திய அணியை நீங்கள் பார்க்கும் போது தற்போது பவர் ஹிட்டர் தேவைப்படுகிறது. அதை அக்சர் படேல் உங்களுக்கு செய்வார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *