Ayalaan Box Office Day 7: அட பாவமே..! ஒரே வாரத்தில் ஆட்டம் கண்ட அயலான் பாக்ஸ் ஆபிஸ் வசூல்
சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த வாரம் 12ம் தேதி வெளியானது.
அயலான் வெளியாகி ஒரு வாரம் முடிந்துவிட்ட நிலையில், படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 4 நாட்களில் 50 கோடி ரூபாய் வரை வசூலித்த அயலான், இப்போது ஆட்டம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அயலான் முதல் வாரம் பாக்ஸ் ஆபிஸ்
சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படத்துக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ரவிக்குமார் இயக்கியுள்ள இந்தப் படம், ஏலியன்ஸை பின்னணியாக வைத்து சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் உருவாகியுள்ளது. இந்தியாவில் முதல் ஏலியன்ஸ் படம் என்ற பெருமையுடன் வெளியான அயலான், ரசிகர்களிடம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.
இயக்குநர் ரவிக்குமாரின் கதை, திரைக்கதை மட்டுமின்றி, கிராபிக்ஸ் வேலைகளும் செம்ம தரமாக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டியிருந்தனர். இதனால் அயலான் படத்துக்கு ஃபேமிலி ஆடியன்ஸ்களிடம் நல்ல ரீச் இருந்தது. இதனால் இந்தப் படம் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலிக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் நம்பிக்கைத் தெரிவித்தன. ஆனால், அயலான் வெளியாகி நேற்றோடு ஒரு வாரம் மட்டுமே முடிந்துள்ளது.
அதற்குள்ளாகவே அயலான் படத்தின் கலெக்ஷன் ஆட்டம் கண்டுள்ளது ஏமாற்றம் கொடுத்துள்ளது. முதல் நாளில் இருந்தே அயலான் படத்துக்கு நல்ல ஓபனிங் கிடைத்தது. இதனால் அயலான் முதல் நாளில் 10 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருக்கும் என சொல்லப்பட்டது. ஆனால், படக்குழு முதல் 4 நாட்களில் 50 கோடி ரூபாய் வசூல் செய்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதனையடுத்து வரும் நாட்களிலும் அயலான் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று முன்தினமே பொங்கல் விடுமுறை முடிவுக்கு வந்தது. இதனால் அயலான் திரைப்படம் முதல் 6 நாட்களில் 60 கோடி ரூபாய் வரை கலெக்ஷன் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், பொங்கல் விடுமுறை முடிந்த முதல் நாளான நேற்று, 1.5 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.