தர்புகா சிவா இசையில் ‘அயோத்தி கீதம்’
அயோத்தியில், 22-ம் தேதி ராமர் கோயில் திறக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ராமஜென்ம பூமி தீர்த்த அறக்கட்டளை செய்து வருகிறது. இந்நிலையில் ‘ஓ மை காட் பிக்சர்ஸ்’ என்ற திரைப்பட நிறுவனம் ‘அயோத்தி கீதம்’ ஒன்றை உருவாக்கியுள்ளது. டாக்டர் நாகராஜ் வி, எழுத்து, இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த ஆல்பத்துக்கு தர்புகா சிவா இசை அமைத்துள்ளார்.
தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்த ஆல்பத்துக்கு, தமிழ் பாடல் வரிகளை மதன் கார்க்கி எழுதியுள்ளார். விஜய் பிரகாஷ், எஸ்.பி.சரண், ஹரிசரண், ஸ்ரீநிவாஸ், தர்புகா சிவா சத்யபிரகாஷ் உட்பட பலர் பாடியுள்ளனர். சோனி மியூசிக் (சவுத்) நிறுவனம் இந்த ஆல்பத்தை நேற்று வெளியிட்டுள்ளது