அயோத்தி ராமருக்கு தினமும் ஒரு மணி நேரம் ஓய்வு!
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக ராமர் கோவில் மிக பிரம்மாண்டமாக கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து ஜனவரி 22ம் தேதி வெகு விமரிசையாக திறப்பு விழா நடைபெற்றது.
உலகிலேயே அதிக பக்தர்கள் வந்து குவியும் திருப்பதிக்கு போட்டியாக அயோத்தியிலும் தினமும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் அயோத்தி ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மாவட்ட நிர்வாகமும், மாநில அரசும் போலீசாரை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளது.
கோவிலை பொறுத்தவரை அதிகாலை 4 மணிக்கு தினசரி பூஜைகள் தொடங்கப்பட்டு, பக்தர்களுக்கான பொதுதரிசன நேரம் காலை 6 மணியில் இருந்து தொடங்குகிறது. பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் ஓய்வின்றி தரிசன நேரம் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டது.