Ayodhya Ram Mandir: “ஆசீர்வாதமாக உணர்கிறோம்” – ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்கும் பிரபலங்கள் உற்சாகம்!

யோத்தி ராமர் கோயில் இன்று திறக்கப்படும் நிலையில், இதன் விழாவில் பங்கேற்கும் பிரபலங்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

அதனைப் பற்றி காணலாம்.

பாடகர் ஷங்கர் மகாதேவன்

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்றுள்ள பாடகர் ஷங்கர் மகாதேவன், ‘நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன். நானும் என் மனைவியும் இந்த கோயில் திறப்பு விழாவில் ஒரு அங்கம் என்பதை ஆசீர்வாதமாக உணர்கிறோம். உலகில் அமைதி நிலவ பிரார்த்திக்கிறேன்’ என்று கூறியுள்ளார். இதேபோல் இசையமைப்பாளர் அனு மாலிக் கூறுகையில், ‘இது ஒரு அற்புதமான தருணம். ராமர் கோயிலை கண்டு நான் மிகவும் உணர்ச்சி வசப்படுகிறேன். இது ஒரு பெரிய சந்தர்ப்பம்’ என தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகை ஷெபாலி ஷா

லக்னோ விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாலிவுட் நடிகை ஷெபாலி ஷா , ‘நான் அயோத்தியில் இருப்பதில் பெருமை கொள்கிறேன். இது நம் நாடும், இந்தியர்களாகிய நாமும் அனுபவிக்கக்கூடிய மிகப்பெரிய கலாச்சார தருணங்களில் ஒன்றாகும். இந்த தருணம் நாடு முழுவதும் கொண்டாடுகிறது. இது ஒரு அனைவருக்குமான மகிழ்ச்சியான தருணம்’ என கூறியுள்ளார்.

நடிகர் அனுபம்கெர்

நடிகர் அனுபம் கெர் தெரிவிக்கையில், ‘பல வருடங்களாக இந்த நாளுக்காக தான் காத்திருந்தோம், இறுதியாக அந்த நாள் வந்துவிட்டது. மேலும் நான் அனைத்து ராம பக்தர்களுடன் அயோத்தியை அடைந்தேன். விமானம் முழுவதும் பக்தியின் அற்புதமான சூழலைக் கொண்டிருந்தது’ என தெரிவித்துள்ளார்.

பாடகர் சோனு நிகம்

இது மிகவும் உணர்ச்சிகரமான தருணம். உலகில் எங்கெல்லாம் சனாதன தர்மம் இருக்கிறதோ அங்கெல்லாம் மகிழ்ச்சியும் உற்சாகமும் இருக்கிறது என்பதில் எனக்கு மகிழ்ச்சியே. இப்படி ஒரு நிகழ்வு நடக்கும் காலத்தில் கடவுள் நம்மைப் பிறக்கத் தேர்ந்தெடுத்தார் என்பதை நம்மால் பார்க்க முடிந்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறது. அழைப்பிதழ் பெற்ற அதிர்ஷ்டசாலிகளில் நானும் ஒருவன் என பாடகர் சோனு நிகம் தெரிவித்துள்ளார்.

நடிகர் விவேக் ஓபராய்

பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் கூறுகையில், ‘நான் முதன்முறையாக அயோத்திக்கு வந்திருக்கிறேன். நாம் சுவாசித்தால், ‘ராம பக்தி’ உங்களுக்குள்ளும் வரும் என்று உணர்கிறேன். இந்த இடத்தின் ஆற்றல் அதிகம். மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர். ராமர் எப்போதும் மக்களையும் சமூகத்தையும் இணைத்திருக்கிறார் என்று நான் நினைக்கிறேன்’ என கூறியுள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *