Ayodhya Ram Temple: ராம் சரண் முதல் தனுஷ் வரை… ஸ்ரீ ராம் மந்திர் திறப்பு விழாவிற்கு அழைப்பு வழங்கப்பட்ட பிரபலங்கள்!
ஒட்டுமொத்த இந்தியாவே ஜனவரி 22ம் தேதி ஸ்ரீ ராம் ஜன்ம பூமியில் நிகழவிருக்கும் ராமர் கோயில் திறப்பு விழாவுக்காக காத்திருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற இருக்கும் இந்த விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதிலும் உள்ள பல துறைகளை சேர்ந்த பிரபலங்களுக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளது.
அந்த வகையில் தென்னிந்திய திரையுலகை சேர்ந்த ரஜினிகாந்த், சிரஞ்சீவி மற்றும் மோகன்லால் உள்ளிட்ட பலருக்கும் அழைப்பிதழ்கள் வழங்கி கௌரவிக்கபட்டுள்ளனர். அப்படி அழைப்பிதழ் பெற்ற நட்சத்திரங்கள் யார் யார் என்பதை பார்க்கலாம் :
ரஜினிகாந்த் :
கோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நிஜ வாழ்க்கையிலும் ஆன்மீகத்தில் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அடிக்கடி தனது ஓய்வு சமயத்தில் இமயமலைக்குச் செல்வதை வழக்கமாக கொண்டவர். அவருக்கு வழங்கப்பட்ட இந்த மரியாதைக்கு அவர் நேரில் சென்று இந்த விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்.
ராம் சரண் :
தென்னிந்திய திரையுலகில் அழைப்பை பெற்ற நட்சத்திரம் மெகா ஸ்டார் ராம் சரண் மற்றும் அவரின் மனைவி உபாசனா கொனிடேலா ஆகியோருக்கு அழைப்பு விடப்பட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகின.
மோகன்லால் :
ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு மலையாள நடிகர் மோகன்லாலுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. ஆனால் அவர் தற்போது மலைக்கோட்டை வாலிபன் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் மிகவும் மும்மரமாக ஈடுபட்டுள்ளார். அப்படம் ஜனவரி 25ம் தேதி வெளியாக உள்ளதால், ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு வருகை கொடுப்பாரா என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது.
சிரஞ்சீவி :
டோலிவுட் சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது. அவர் இந்த விழாவில் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது. பிரசாந்த் வர்மா மற்றும் தேஜா சஜ்ஜாவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஹனுமான் திரைப்படத்தின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது ஒவ்வொரு டிக்கெட்டில் இருந்தும் 5 ரூபாய் ராம் மந்திர் அறக்கட்டளை நிதிக்கு நன்கொடையாக வழங்கப்படும் என குறிப்பிட்டிருந்தார்.
ரிஷப் ஷெட்டி :
காந்தாரா திரைப்படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த நடிகர் ரிஷப் ஷெட்டி, ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு தனக்கு வழங்கப்பட்ட அழைப்பிதழை சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து அதற்கு நன்றியுள்ளவனாக கருதுவதாக குறிப்பிட்டு இருந்தார்.