பார்க்கும் இடத்தில் எல்லாம் புது அயோத்தி ராமர் கோவில்!! ஒவ்வொரு கிராமமாக வர போகுதாம்…

ஹைதராபாத் (Hyderabad)-இல் கார் அருங்காட்சியகத்தில், அயோத்தியில் திறக்கப்படும் கடவுள் ராமர் கோயிலின் தோற்றத்தில் ஒரு கார் காட்சிக்காக நிறுத்தப்பட்டு உள்ளது. கடந்த ஜனவரி 19ஆம் தேதியில் இருந்து அருங்காட்சியகத்தில் நிறுத்தப்பட்டு இருக்கும் இந்த பிரத்யேகமான ராம் மந்திர் காரை இன்னும் எத்தனை நாட்களுக்கு அங்கு காணலாம் என்பதை பற்றியும், இந்த கஸ்டமைஸ்ட் காரை பற்றியும் இனி பார்க்கலாம்.

உத்தர பிரதேசம் மாநிலத்தின் அயோத்தியில் கடவுள் ராமர் பிறந்த இடத்தில் புதிய பிரம்மாண்ட கோவில் எழுப்பப்பட்டு உள்ளதை அறிந்திருப்பீர்கள். நாடு முழுவதும் பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் இந்த கோவில் வருகிற ஜனவரி 22ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. இந்த திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உள்பட நாட்டின் முக்கிய பிரபலங்களும், கோடிக்கணக்கிலான பக்தர்களும் கலந்துக் கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் வரும் என முன்னரே கணிக்கப்பட்டு விட்டதால், அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. அதேநேரத்தில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ராமர் கோவில் திறப்பை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த சுதா கார் அருங்காட்சியகத்தில் வித்தியாசமாக, அயோத்தியில் திறக்கப்பட உள்ள ராமர் கோவிலின் தோற்றத்தில் ஒரு கார் காட்சிக்கு நிறுத்தப்பட்டு உள்ளது.

பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்க்கக்கூடிய வகையில் உள்ள இந்த வாகனத்தில், அடியில் இருப்பது கார் ஒன்றின் வழக்கமான சேசிஸ் மற்றும் சக்கரங்கள் தான். அதற்கு மேலே, வழக்கமான கார் பேனல்களுக்கு பதிலாக, அயோத்தியில் எழுப்பட்டப்பட்டு உள்ள கடவுள் ராமர் கோவிலின் தோற்றம் சிறிய அளவில், கூடாரம் போல் கொடுக்கப்பட்டுள்ளது. அவ்வளவு பெரிய கோவிலை சிறிய அளவில் மாற்றியிருந்தாலும், நுணுக்கமான வேலைப்பாடுகள் நிறைய மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

இதுகுறித்து வீடியோ உடன் பதிவிடப்பட்டுள்ள எக்ஸ் பதிவில், “தொழிற்நுட்பம் மற்றும் கலையின் தனித்துவமான கலவையில், ஹைதராபாத்தை சேர்ந்த சுதா கார் அருங்காட்சியகம் கார் ஒன்றில் அயோத்தி ராமர் கோவில் மாதிரியை பொருத்தி தலைசிறந்த படைப்பை வடிவமைத்து உள்ளது” என குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த ‘அயோத்தி கோவில்’ கார் ஹைதராபாத்தில் சுதா அருங்காட்சியகத்தில் வருகிற 2024 பிப்ரவரி 15ஆம் தேதி வரையில் இருக்கும். இதுகுறித்து சுதா அருங்காட்சியகத்தின் உரிமையாளர் சுதாகர் யாதவ் கூறுவதன்படி பார்த்தால், இவ்வாறான ஒரு வாகனத்தை காட்சிப்படுத்த கடந்த 2 வருடங்களாக இவர்களது குழு உருவாக்க பணிகளில் ஈடுப்பட்டு வந்துள்ளது. இந்த 2 வருடங்களில் மொத்தம் 21 பேர் இந்த வாகனத்தில் வேலை செய்துள்ளனர்.

இதுகுறித்து மேலும் பேசிய சுதாகர் யாதவ், “இது ஒரு மொபைல் வேன் ஆகும். இதை சரியான நேரத்தில் முடித்தத்தில் மிக்க மகிழ்ச்சி. ஜனவரி 19ஆம் தேதி முதல் இந்த காரை இங்குள்ள புகழ்பெற்ற கண்காட்சி மைதானத்தில் வைத்துள்ளோம். இதன்பிறகு, அனைவராலும் அயோத்திக்கு செல்ல முடியாது என்பதால் கிராமங்களுக்கு கொண்டு செல்ல உள்ளோம்.

அயோத்தியை அவர்களின் வீட்டு வாசலுக்கு கொண்டு செல்வோம்” என கூறியுள்ளார். ஜனவரி 22ஆம் தேதி அயோத்தியில் கடவுள் ராமர் கோவில் திறப்பு நிகழ்ச்சியை நேரலையாக தூர்தர்ஷன், டிடி நியூஸ் மற்றும் டிடி நேஷ்னல் டிவி சேனல்களில் காணலாம். ஜனவரி 23ஆம் தேதியில் இருந்து பொதுமக்கள் சாமியை பார்க்க அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *