ஏராளமான பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் ஆயுர்வேத தேநீர்
ஆயுர்வேத தேநீர் ஒரு பாரம்பரியமானதாகும். இது செரிமான பிரச்சனையை முதல் மாதவிடாய் பிரச்சினை வரை தீர்வு தருகிறது.
உடல் ஏற்படும் பொதுவான ஒரு சில பிரச்சினைகளுக்கு இந்த தேநீர் போட்டு குடித்தால் சீக்கிரமான நிவாரணம் பெற்றுக்கொள்ள முடியும்.
ஆயுர்வேத மருத்துவத்தின்படி, சீரகம், கொத்தமல்லி மற்றும் பெருஞ்சீரகம் ஆகிய மூன்று மசாலாப் பொருட்களின் கலவையானது உங்கள் உடம்பில் உள்ள அனைத்து பிரச்சினையும் தீர்க்கக் கூடிய சக்திக் கொண்டது.
எனவே இதை எப்படி செய்யலாம் எனவும் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம்.
குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
வாயுத்தொல்லை குறைக்கும்
அஜீரணத்தில் இருந்து நிவாரணம்
தலைவலி குறையும்
குடலை சீராக வைத்திருக்கும்
முகப்பருவை குறைக்கிறது
வயிற்று வலியை குறைக்கும்
பசியைத் தூண்டுகிறது
குமட்டல் மற்றும் வாந்தியை குறைக்கும்
கல்லீரல் மற்றும் சிறுநீரக நச்சு நீக்கம்
மாதவிடாய் வலியை போக்கும்
இரத்த குளுக்கோஸை சமப்படுத்தும்
கல்லீரலுக்கு சிறந்தது
மன அழுத்தத்தில் இருந்து தீர்வு கிடைக்கும்
தயாரிக்கும் முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
பின் அதில் சீரகம், கொத்தமல்லி விதை, பெருஞ்சீரகம் சேர்த்து 7 – 10 நிமிடத்திற்கு கொதிக்க வைக்கவும்.
அடுத்து அதை வடிக்கட்டி எடுத்து காலையில் வெறும் வயிற்றில் அல்லது காலை உணவு சாப்பிட்ட பிறகு 1 மணி நேரம் கழித்து குடிக்கலாம்.
குறிப்பு : சீரகம் விதைகள் மாதவிடாய் இரத்தப் போக்கை அதிகரிக்கும். எனவே கர்ப்பிணி பெண்கள் தவிர்ப்பது நல்லது.