Baakiyalakshmi serial: என்ன லவ்வா.. கேள்வி கேட்ட கோபி.. அதிர்ச்சியில் உறைந்த பாக்கியா!
விஜய் டிவியின் முன்னணி தொடர்களின் வரிசையில் முதல் ஐந்து இடங்களில் தொடர்ந்து இடம்பெற்று வரும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களாக அமிர்தாவை அவரது முன்னாள் கணவர் கணேஷ் கடத்தியதும் கட்டாயப்படுத்தி மீண்டும் திருமணம் செய்ய முயன்றதும் நடந்தது. நடக்கவிருந்த திருமணத்தை எழில், பாக்கியா உள்ளிட்ட குடும்பத்தினர் கண்டுபிடித்து தடுத்ததும் நடந்தது. கத்தி முனையில் அமிர்தா மற்றும் குழந்தை நிலாவை கணேஷ் கடத்திய நிலையில் அவர்களை மிகவும் போராட்டத்திற்கு இடையில் எழில் மற்றும் குடும்பத்தினர் கண்டுபிடித்து மீட்டனர்.
இதற்கு பழனிச்சாமியும் உதவியாக இருந்தார். இந்நிலையில் இன்றைய எபிசோடில் அவரை நேரில் சந்தித்து பாக்கியா நன்றி தெரிவிப்பதாக அமைந்திருந்தது. அவர்கள் இருவரும் ரெஸ்டாரெண்டில் பேசிக் கொண்டிருந்ததை பார்க்கும் கோபி, வழக்கம்போல அவர்கள் நட்பை சந்தேகப்படுகிறார். உடனிருக்கும் தன்னுடைய நண்பர் செந்திலிடமும் அவர்கள் உறவை கொச்சைப்படுத்தி பேசுகிறார். இதனிடையே, பழனிச்சாமி புறப்பட்டு சென்ற நிலையில், பாக்கியாவிடம் அவர்களது இந்த சந்திப்பு குறித்து மிகவும் கேவலமாக கேள்வி எழுப்புகிறார்., இதனால் பாக்கியா ஆத்திரமடைகிறார்.
பாக்கியலட்சுமி தொடர்: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களின் வரிசையில் இரண்டாவது இடத்தில் தொடர்ந்து இருந்து வருகிறது பாக்கியலட்சுமி தொடர். இந்த தொடரில் கோபி, பாக்கியா, ராதிகா, பழனிச்சாமி உள்ளிட்ட லீட் கேரக்டர்களை அடிப்படையாகக் கொண்டு காட்சி அமைப்புகள் மற்றும் எபிசோட்கள் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பாக பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலுடன் இணைந்து சங்கமம் எபிசோடில் இந்த தொடர் சிறப்பான தருணங்களை ரசிகர்களுக்கு கொடுத்தது. இதையடுத்து அமிர்தாவின் முன்னாள் கணவன் கணேஷ் அவரை கத்தி முனையில் கடத்தி விருப்பத்திற்கு விரோதமாக திருமணம் செய்ய முற்பட்டார்.
எழில் -அமிர்தா ரொமான்ஸ்: ஆனால் அமிர்தாவின் கணவன் எழில் மற்றும் பாக்கியா குடும்பத்தினர் இணைந்து இந்த முயற்சியை தகர்த்தனர். இதற்கு பழனிச்சாமியும் பேருதவியாக இருந்தார். இந்நிலையில் இன்றைய எபிசோடில் அமிர்தா மற்றும் எழில் இருவரும் உணர்ச்சிபூர்வமாக பேசுவதாக அமைந்திருந்தது. தன்னை எந்த காலத்திலும் எழில் வெறுத்து விட கூடாது என்று அமிர்தா கேட்க, தான் அவரை மிகவும் காதலிப்பதாக எழில் கூறுவதாக இன்றைய எபிசோடில் காணப்பட்டது. இதையடுத்து கோபியின் நிறுவனம் மூடப்பட்டதை அவர் ராதிகா உள்ளிட்ட குடும்பத்தினருக்கு தெரிவிக்காமல் இருக்கிறார்.
பாக்கியாவை பார்த்து கோபி ஆத்திரம்: இதனிடையே அவர் எப்போதும் போல கிளம்பி வேலைக்கு செல்வதாக வீட்டை விட்டு போகிறார். அவர் ஒரு ரெஸ்டாரண்டில் தன்னுடைய நண்பன் செந்திலுடன் இணைந்து காபி சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது அங்கு பழனிச்சாமி மற்றும் பாக்கியா இருவரும் பேசிக் கொண்டிருப்பதை பார்க்கிறார். அமிர்தா கடத்தல் விவகாரத்தில் உதவியாக இருந்த பழனிச்சாமிக்கு பாக்கியா நன்றி தெரிவிக்கிறார். அவர்கள் இருவரும் ஒன்றாக பேசிக் கொண்டிருப்பதை பார்த்து கோபி கோபத்துடன் பாக்கியாவை பார்த்து கேள்வி எழுப்புகிறார். என்ன லவ்வா என்று அவர் கேட்பதை பார்த்து அவரது நண்பர் செந்திலே அதிர்ச்சி அடைகிறார்.
பதிலடி கொடுக்கும் பாக்கியா: இதை கேட்டு ஆத்திரம் அடையும் பாக்கியா கோபிக்கு பதிலடி கொடுக்கிறார். தான் காதலிப்பதாக இருந்தாலும் தன்னுடைய மகன்களின் விருப்பத்தை கேட்டறிந்து அதன் பின்பு அனைவருக்கும் தெரியும் விதமாகத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்றும் அனைவரையும் தவிக்க விட்டு விட்டு யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்ய மாட்டேன் என்றும் மறைமுகமாக கோபியை குத்தி காட்டுகிறார் பாக்யா. அவரது இந்த பதிலால் திகைக்கும் கோபி செந்திலிடம் புலம்புவதாக இன்றைய எபிசோட் காணப்படுகிறது