பாபர் அசாம் சிறப்பாக விளையாடியும் சோகம்.. வினோதமான சாதனை.. முதல் ஆசிய பேட்ஸ்மேன்
இதன் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் முக்கிய பொறுப்புகளில் இருந்த அனைவரும் நீக்கப்பட்டார்கள். அந்த இடங்களுக்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்கள் கொண்டுவரப்பட்டார்கள்.
இந்த சூழ்நிலையில் அப்போதைய கேப்டனான பாபர் அசாம் பதவியில் இருந்து அவரே விலகிக் கொண்டால் நீக்கப்பட மாட்டார் என்பதாக சூழ்நிலை நிலவியது. இதை உணர்ந்த அவர்தானே பதவியில் இருந்து விலகிக் கொண்டார்.
இந்த நிலையில் பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு ஷான் மசூத் கேப்டனாகவும், வெள்ளைப் பந்து அணிகளுக்கு ஷாகின் ஷா அப்ரிடி கேப்டன் ஆகவும் நியமிக்கப்பட்டார்கள். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஷான் மசூத் இழந்தார். இன்று நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை ஷாகின் ஷா அப்ரிடி இழந்திருக்கிறார்.
ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தற்பொழுது பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் அந்த அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகள் நடைபெற்ற முடிந்து இருந்த நிலையில் இரண்டு போட்டிகளையும்
நியூசிலாந்து வென்று இருந்தது. இந்த இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் சதம் அடித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்து 224 ரன்கள் குவித்தது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் பின் ஆலன் 62 பந்துகளில் ஐந்து பவுண்டரி மற்றும் 16 சிக்ஸர்களுடன் 137 ரன்கள் குவித்து மிரட்டினார்.