Bad Luck: செவ்வாய் புரட்டி எடுக்க போகும் ராசிக்காரர்கள்

நவகிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் விளங்கி வருகிறார். தைரியம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வீரம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக இவர் விளங்கி வருகிறார். செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றுகிறார்.
செவ்வாய் பகவான் கடந்த டிசம்பர் 27ஆம் தேதி அன்று தனுசு ராசிக்குள் நுழைந்தார். இந்த இடமாற்றம் 12 ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். செவ்வாய் பகவானின் சம்சாரம் சில ராசிகளுக்கு கடினமான சூழ்நிலைகளில் உருவாக்கிக் கொடுக்கப் போகின்றார்.
செவ்வாய் பகவானால் சங்கடங்களை சந்திக்கப் போகும் சில ராசிகளை இங்கே காண்போம். இவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
மேஷ ராசி
செவ்வாயின் சஞ்சாரம் உங்களுக்கு பாதகமான சூழ்நிலையை உருவாக்கப் போகின்றது. திடீரென்று செலவுகள் அதிகரிக்கும். சில இழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. மன அழுத்தம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சில ஏற்றத்தாழ்வுகள் உருவாகும். குடும்பத்தில் சண்டைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவே எச்சரிக்கையாக இருங்கள்.
மிதுன ராசி
செவ்வாயின் செஞ்சாரம் உங்களுக்கு சில சிக்கல்களை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. வாழ்க்கை துணையோடு பேசும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். திருமண வாழ்க்கை சற்று சிக்கல்களை ஏற்படுத்தும். உடன் பிறந்தவர்களால் சங்கடம் ஏற்படும். சில நேரங்களில் மோசமான பலன்கள் உங்களை தேடி வரும். காதல் வாழ்க்கையில் சங்கடங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குடும்ப உறுப்பினர்களுடன் பேசும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சற்று கவனமாக இருப்பது நல்லது.
விருச்சிக ராசி
செவ்வாய் பகவானால் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குடும்ப உறவில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வாகனங்களில் செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்களுடன் பேசும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நாக்கை கட்டுப்படுத்த வேண்டும். சில விபத்துக்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது வாகனம் ஓட்டும்போது மிகவும் கவனம் தேவை.
மகர ராசி
செவ்வாய் பகவான் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை கொடுக்கப் போவதில்லை. நீதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. தொலைதூர பயணத்தை தவிர்க்க வேண்டும். அதிகம் செலவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் சற்று தள்ளிப் போகும். வீண் செலவுகளை தவிர்ப்பது நல்லது.