Bad Luck Rasis: புதன் சிரமப்படுத்த போகும் ராசிகள்
நவகிரகங்களின் இளவரசன் நாயகனாக விளங்க கூடியவர். புதன் பகவான் இவர் வியாபாரம் படிப்பு பேச்சு புத்திசாலித்தனம் உள்ளிட்டவர்களுக்கு காரணியாக விளங்குகிறார் நவகிரகங்களில் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றிக் கொள்ளக்கூடியவர் புதன் பகவான்.
புதன் பகவான் துலாம் மற்றும் மிதுன ராசியின் அதிபதியாக விளங்கி வருகிறார். தனுசு ராசியில் பயணம் செய்து வந்த புதன் பகவான் கடந்த டிசம்பர் 13ஆம் தேதி அன்று தனுசு ராசியில் வக்ர நிலை அடைந்தார். இவர் தற்போது பின்னோக்கிய பயணத்தை தொடங்கியுள்ளதால் அதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும்.
இவருடைய பின்னோக்கிய பயணத்தால் சில ராசிகள் நல்ல பலன்களை பெற போகின்றனர். இருப்பினும் சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. புதன் பகவானின் வக்கிர பயணத்தால் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் குறித்து இங்கே காண்போம்.
கடக ராசி
புதன் பகவான் உங்கள் ராசியில் ஆறாம் வீட்டில் பின்னோக்கிய பயணத்தை தொடங்கியுள்ளார். அதன் காரணமாக உங்களுக்கு சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேலைத்தடங்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. உடன் பிறந்தவர்களால் சில சிக்கல்கள் ஏற்படும். மற்றவர்களிடம் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். புதிய முயற்சிகளை தற்போது தவிர்ப்பது நல்லது. செலவுகள் அதிகமாக வரக்கூடும். பயணங்கள் என்பது கவனமாக இருக்க வேண்டும்.
மேஷ ராசி
உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் புதன் பகவான் பின்னோக்கிய பயணத்தை தொடங்கியுள்ளார். அதன் காரணமாக சில சிரமங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருப்பது நல்லது. வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். இல்லை என்றால் மிகப்பெரிய சண்டைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடன் பிறந்தவர்களிடம் வாக்குவாதம் செய்வதை தவிர்க்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்காது. நீண்ட தூர பயணத்தை தவிர்ப்பது நல்லது.
ரிஷப ராசி
உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் புதன் வக்ரமடைந்து உள்ளார். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். திருமண வாழ்க்கையில் சித்தர்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உறவினர்களால் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பேச்சில் கவனமாக இருக்க வேண்டும். செலவுகள் அதிகமாக வர வாய்ப்பு உள்ளது. கடன் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது இல்லையென்றால் சிக்கல்கள் உண்டாகும்.