பஜ்ஜி, போண்டா கணக்கா கார் விற்பனை.. இந்தியாவுல என்ன நடக்குது?!
இந்தியாவில் ஒரு நல்ல பைக் வாங்க வேண்டுமென்றால் குறைந்தது 1.5 லட்சம் ரூபாய் தேவை, குறிப்பாக இளம் தலைமுறையினரின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் ஒரு பைக் வாங்க வேண்டுமெனில் 2 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவாகும்.பைக் வாங்க அதிகம் செலவு செய்வது ஒரு பக்கம் இருந்தாலும் பெரிய பைக்குகளில் மைலேஜ் காருக்கு இணையாக வருகிறது.
இதனால் பைக் வாங்கும் காசை காருக்கு டவுன் பேமெண்ட் ஆகச் செலுத்தி கார் வாங்கும் போக்கு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதன் வாயிலாக இந்தியாவில் புதிய கார் வாங்குவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைவிட முக்கியமாக இந்தியாவில் தற்போது ஆடம்பரம் மற்றும் ப்ரீமியம் கார்களை வாங்குவோர் எண்ணிக்கை பெரிய அளவில் உயர்ந்துள்ளது.இந்தியாவில் 10- 15 லட்சத்திற்கு மேல் கார் இருந்தால் வாங்கமாட்டார்கள் என்ற நிலை மலையேறிவிட்டது. இதற்கு உதாரணம் மாருதி சுசூகி வெளியிட்ட கிசாஷி என்னும் கார். இந்தக் கிட்டதட்ட 18 லட்சம் ரூபாய்க்கும் அதிக விலையில் விற்கப்பட்ட காரணத்தால் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான கார்களை மட்டுமே விற்பனை செய்தது, சந்தையை விட்டு மொத்தமாக வெளியேறியது. ஆனால் இன்று நிலைமையே வேறு.இந்தியாவில் இயங்கி வரும் முன்னணி ஆடம்பர கார் நிறுவனங்களில் ஒன்று ஜெர்மனி நாட்டின் AUDI. இந்தக் கார்களின் டிசைனுக்குத் தனி இலக்கணம் உள்ளது, இதனாலேயே ஆசியாவில் அதிகப்படியான வர்த்தகக்தை கொண்டு உள்ளது. இதேபோல் ஜெர்மனி பிராண்டுகள் என்றாலே பர்ஃபாமென்ஸ் -க்கு குறைவிருக்காது என்பது எழுதப்படாத விதி.இந்த வகையில் சிறப்பான டிசைன், தரமான பர்ஃபாமென்ஸ், ஆடம்பர வசதிகள் அடங்கிய ஆடி கார்கள் இந்தியாவில் ப்ரீமியம் பிரிவுக்கு மேல் ஆடம்பர பிரிவில் விற்கிறது. இந்தியாவில் சமீபத்தில் ஆடம்பர கார்களின் விற்பனை அதிகமாகிவிட்டது எனக் கூற AUDI காரின் விற்பனை அளவு ஒரு முக்கிய உதாரணம்.2022ல் ஆடி நிறுவனம் 4187 கார்களை மட்டுமே விற்பனை செய்த நிலையில், 2023ல் 89 சதவீத வளர்ச்சியில் 7931 கார்களை விற்பனை செய்துள்ளது. 2023ல் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கார்களில் Q3 Sportback, Q8 e-tron, Q8 Sportback e-tron, A4, A6, Q5 ஆகியவை அடங்கும்.இதேபோல் டாப் என்ட் மாடலான Q7, Q8, A8 L, S5 Sportback, RS5 Sportback, RS Q8, e-tron GT, RS e-tron GT ஆகியவற்றுக்கும் பெரிய டிமாண்ட் உள்ளது. இதனால் 2024 ஆம் ஆண்டின் விற்பனையும் சிறப்பாக இருக்கும் எனத் தெரிகிறது. இப்போ மாருதி சுசூகி, ஹூண்டாய் நிலைமை என்ன..? மாருதி சுசூகி 2023 ஆம் ஆண்டில் வரலாற்றில் முதல் முறையாக இந்நிறுவனம் 20.66 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது