Banana Paniyaram: சுவையான வாழைப்பழ பணியாரம்.., 5 நிமிடத்தில் செய்யலாம்
வீட்டில் விஷேச நாட்களில் அதிகம் வாழைப்பழங்கள் மிச்சமாகிவிடும், அப்போது இந்த சுவையான பணியாரம் செய்து சாப்பிடலாம்.
இந்த சுவையான பஞ்சி போன்ற பணியாரம் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் விரும்பி உண்பார்கள்.
இதனை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பழுத்த வாழைப்பழம் – 3
சுக்கு – ½ ஸ்பூன்
ஏலக்காய் பொடி – ½ ஸ்பூன்
நாட்டு சர்க்கரை பாகு – சுவைக்கேற்ப
கோதுமை மாவு – 4 ஸ்பூன்
அரிசி மாவு – 1 ஸ்பூன்
கருப்பு எள்ளு – 1 ஸ்பூன்
தேங்காய் – தேவைக்கேற்ப
நெய் – 2 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் நன்கு பழுத்த வாழைப்பழங்களை தோலை உரித்து போட்டுக்கொள்ளவும்.
பிறகு அதனுடன் சுக்கு, ஏலக்காய் பொடி மற்றும் நாட்டு சர்க்கரை பாகு ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளுங்கள்.
பின்னர் அதில் கோதுமை மாவு, அரிசி மாவு, சோடா உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
பிறகு கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து அதில் நெய் ஊற்றி சூடானதும் அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள தேங்காய் பல் சேர்த்து நன்றாக பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து அரைத்து வைத்துள்ள கலவையில் இந்த தேங்காய் மற்றும் கருப்பு எள் சேர்த்து நன்றாக கலந்துவிட்டு 15 நிமிடங்கள் அப்படியே வைத்து கொள்ளுங்கள்.
தற்போது பணியார கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் நெய் ஊற்றி பிறகு அரைத்து வைத்துள்ள பணியார மாவை அதில் ஊற்றி மிதமான தீயில் வேகவிடவும்.
பணியாரம் ஒரு பக்கம் வெந்தவுடன் பொறுமையாக மறுபக்கம் திருப்பி நன்றாக வேகவிட்டு இறக்கினால் சுவையான வாழைப்பழ பணியாரம் தயார்.