பெங்களூர்: வாடகை வீட்டுக்கு பார்ட்னர் வேண்டும்.. டிரெண்டாகும் டிவிட்டர் பதிவு..!

பெங்களூரைச் சேர்ந்த ஒரு பெண் தனது ஃபிளாட்டுக்கு ஒரு பார்ட்னர் தேவை எனக் கூறி எக்ஸ் தளத்தில் செய்த பதிவு வைரல் ஆகியுள்ளது. காரணம் அவரது பதிவில் உள்ள டிசைன். உதிஷா மதன் என்ற டிசைனர் கோரமங்களாவில் உள்ள தனது இரண்டு படுக்கையறை, கிச்சன் வீட்டுக்கு ஒரு பார்ட்னர் தேவை என எக்ஸில் பதிவிட்டிருந்தார்.

அந்தப் பதிவை அவர் ஒரு டிசைன் ஆப் மூலம் வீடு பற்றிய படங்கள், தகவல்களை எளிதாகப் படிக்கும்படியும் கண்ணைக் கவரும் வகையிலும் வடிவமைத்திருந்தார்.

இதைப் பார்த்து எக்ஸ் தளத்தில் இருந்து ஏராளமான யூசர்கள் அதைப் பாராட்டிக் குவித்து வருகின்றனர். மிகவும் மெனக்கெட்டு உதிஷா மதன் அந்தப் பதிவை இட்டுள்ளார் என புகழப்பட்டுள்ளார். தனது வீட்டுக்கு பார்ட்னர் ரூ.13750ஐ வாடகையாகத் தந்தால் போதும் எனக் குறிப்பிட்டிருந்தார் உதிஷா மதன்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் அர்கோ மஹாபத்ரா என்ற யூசர் எனக்காக ஒரு மேட்ரிமோனியல் விளம்பரத்தை இவ்வளவு டச்சிங்காக டிசைன் செய்து தரமுடியுமா என பதிவிட்டுள்ளார்.

பாவ்யா மேத்தா என்ற மற்றொரு யூசர் நீங்கள் இதை எவ்வளவு சிறப்பாக உருவாக்கியுள்ளீர்கள் என்பதை பார்த்து பாராட்டுகிறேன். மக்கள் தங்களுடைய இடத்தை வாடகைக்கு விடுவதற்கு நீங்கள் திட்டங்களைத் தொடங்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், உதிஷா மதன் மற்றவர்களை விட மிகக் குறைந்த வாடகையை, குறிப்பாக பெங்களூரில் பிரபலமான, பரபரப்பான பகுதிக்கு கேட்கிறார் என்று சிலர் சுட்டிக்காட்டினர்.

கோரமங்களாவில் ஒற்றை அறைக்கு ரூ. 13,750. ஆகா! இங்கே நான் மகாதேவ்புராவில் ரூ. 23.6 ஆயிரம் செலுத்த வேண்டும்! என்று சுமன் ஹன்சடா என்ற பதிவர் குறிப்பிட்டுள்ளார். ஜுயஸ் என்ற மற்றொரு பதிவர், காஸ்ட்லியான கோரமங்களாவில் ரூ. 14 ஆயிரம் வாடகை. அதுவும் ஒரு நல்ல இடம். நான் கனவு காண்கிறேனா! என்று கூறியுள்ளார்.

2023 ஆம் ஆண்டில், பெங்களூரில் வீட்டு வாடகை மிக அதிகமாக உயர்ந்தது. No Broker’s Real Estate Report 2023 மற்றும் Anarock ஆலோசனை நிறுவனங்களின்படி, பெங்களூரின் முக்கியப் பகுதிகளில் வாடகைகள் 30 சதவிகிதத்துக்கும் மேலாக உயர்ந்துள்ளன.

பெங்களூரில் உள்ள ஏழு சதவீத நில உரிமையாளர்கள் 2023 ஆம் ஆண்டில் வாடகையை 30 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்த்தியுள்ளனர். பெங்களூரில் கணக்கெடுக்கப்பட்ட 52 சதவீத நில உரிமையாளர்கள் வாடகையில் இருந்து வரும் வருமானத்தையே முழுமையாக நம்பியுள்ளனர் என்று நோ புரோக்கர் கூறியுள்ளது.

பெங்களூரின் ஒயிட்ஃபீல்டில் சுமார் 1,000 சதுர அடி பரப்பளவில் உள்ள நிலையான 2பிஎச்கே பிளாட் வாடகை 31 சதவீதம் அதிகரித்துள்ளது, அதே சமயம் சர்ஜாபூரில் உள்ள அத்தகைய வீடுகளுக்கான வாடகை 27 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அனராக் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *