பெங்களூர் டெக் ஊழியர் கதறல்.. டிவிட்டரில் பதிவிட்ட 24 மணிநேரத்தில் வேலை காலி..!

ஐடி துறையில் தற்போது நிலவும் மோசமான பணிநீக்க நிலையைக் குறித்து ட்வீட் செய்த பெங்களூரு டெக் வல்லுநர், ஓரே நாளில் பணிநீக்கம் செய்யப்பட்டது அவருடைய வாழ்க்கை தலைகீழாக மாறிவிட்டது.
முன்பு ட்விக் என அழைக்கப்பட்ட ஃபார்மா என்னும் நிறுவனத்தில் புரோகிராமராக பணியாற்றுபவர் ஜிஷ்ணு மோகன். இவர் பிப்ரவரி 7ஆம் தேதி டெக் துறையில் நிலவும் ரெசிஷன் என்னைப் பயமுறுத்துகிறது. என்னுடைய கரியரில் இதுதான் என்னுடைய மோசமான காலகட்டமாக இருக்கும் என டிவீட் செய்தார்.
இந்த நிலையில் பிப்ரவரி 8 அன்று பணிநீக்கம் செய்யப்பட்டதாகத் தனது டிவிட்டரில் பதிவிட்டு உள்ளார். இவருடைய டிவீட் பல டெக் ஊழியர்களின் தூக்கத்தைத் தொலைத்துள்ளது என்றால் மிகையில்லை.
ஜிஷ்ணு மோகன் தனது பணிநீக்கம் செய்யப்பட்டதாகச் செய்த பதிவில் ஒரு நிறுவன மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக ஃபார்மாவில் மென்பொருள் பொறியாளர் பதவியில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.
அவர் 2019 இல் ஃபார்மா என்னும் நிறுவன பணியில் சேர்ந்தார், நான்கு ஆண்டுகள் அங்கு பணியாற்றினார். அவர் பணிநீக்கம் செய்யப்பட்ட நேரத்தில், மோகன் முழுநேர ரிமோட் ஊழியராகக் கேரளாவின் கொச்சியில் இருந்து பணிபுரிந்து வந்தார்.
ஜிஷ்ணு மோகன் பணிநீக்கம் குறித்த செய்தியை டிவிட்டரில் பதிவிட்ட அடுத்த நிமிடத்தில் அவருடைய பதிவுக்கு ஏக்கசக்க கமெண்ட். பலரும் அவருடைய ரெஸ்யூம்-ஐ கேட்டு உதவிடவும் முன்வந்தனர். பலர் வேலை வாய்ப்புகள் குறித்து அறிவிப்புகளைப் பகிர்ந்தனர்.