பிப்ரவரி மாதம் வங்கிகளுக்கு 11 நாட்கள் விடுமுறை..!
இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளின் செயல்பாட்டை கட்டுப்பாட்டில் வைத்துள்ள இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஆனது நடப்பாண்டின் பிப்ரவரி மாதத்தில் வங்கி ஊழியர்களுக்கு வழங்கப்பட உள்ள விடுமுறை குறித்த பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் படி, 29 நாட்களை கொண்ட இம்மாதத்தில் வங்கி ஊழியர்களுக்கு 11 நாட்கள் அரசு விடுமுறை வழங்கப்பட உள்ளது, மீதமுள்ள 18 நாட்கள் வழக்கமான வேலை நாட்களாக அனுசரிக்கப்பட உள்ளது. இவ்விடுமுறைகள் விடப்படும் நாட்களும், அதற்கான காரணங்களும் பின்வருமாறு பட்டியலிடப்பட்டுள்ளது.
விடுமுறை நாட்கள் தேதி வாரியாக:
04.02.2024 – ஞாயிறுக் கிழமை
10.02.2024 – இரண்டாம் சனிக்கிழமை
11.02.2024 – ஞாயிறுக் கிழமை
14.02.2024 – வசந்த பஞ்சமி அல்லது சரஸ்வதி பூஜை (திரிபுரா, ஒடிசா, மேற்கு வங்காளம்)
15.02.2024 – லுய் நாயகி நிக் திருவிழா / நாகா பழங்குடியினரின் அறுவடை திருவிழா (மணிப்பூர்)
18.02.2024 – ஞாயிறுக் கிழமை
19.02.2024 – சத்ரபதி சிவாஜி பிறந்த நாள் (மகாராஷ்டிரா)
20.02.2024 – மாநில தினம் (மிசோரம், அருணாச்சல பிரதேசம்)
24.02.2024 – நான்காம் சனிக்கிழமை
25.02.2024 – ஞாயிறுக் கிழமை
26.02.2024 – நியோகம் திருவிழா (அருணாச்சல பிரதேசம்)