வலையை விரிக்கும் வங்கிகள்.. மாட்டிக்காதீங்க பாஸ்..!!

ந்திய ரிசர்வ் வங்கி சில வாரங்களுக்கு முன்பு பாதுகாப்பற்ற கன்ஸ்யூமர் கடன்களுக்கான ரிஸ்க் அளவீட்டை உயர்த்தியது.
இதன் மூலம் வங்கிகள் கூடுதல் மூலதனத்தை ஒதுக்கி வைக்கும் நிலை உருவானதால் கன்ஸ்யூமர் லோன் மீதான வட்டியும், அளிக்கப்படும் அளவும் பெரிய அளவில் குறைந்துள்ளது. இப்படியிருக்கையில் தனியார் வங்கிகள் கடன் வர்த்தகத்தை அதிகரிக்க மாற்று முயற்சிகளை மேற்கொண்டு உள்ளது.
ஆர்பிஐ உத்தரவைத் தொடர்ந்து தனியார் வங்கிகள் செப்டம்பர் – டிசம்பர் காலாண்டில் தனிநபர் கடன் வழங்குவதைத் தொடர்ந்து வளர்த்து வருகின்றன. வங்கிகளின் சமீபத்திய காலாண்டு தரவுகள் படி, தனிநபர் கடன் புத்தகங்கள் வருடாந்திர அடிப்படையில் 10% முதல் 86% வரை உயர்ந்துள்ளன. ஐசிஐசிஐ வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி போன்ற முன்னணி வங்கிகள் 37%, 32% மற்றும் 28% வளர்ச்சியைத் தனிநபர் கடன் பிரிவில் வர்த்தக வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. IndusInd Bank மற்றும் Federal Bank போன்ற பிற வங்கிகள் 57% மற்றும் 86% வருடாந்திர வளர்ச்சியை அடைவதன் மூலம் பர்சனல் லோன் வழங்குவதில் மிகவும் தீவிரமாக இருப்பதைக் காட்டுகிறது.
மிகப்பெரிய தனியார் கடன் வழங்குநரான HDFC வங்கி தனிநபர் கடன் பிரிவில் 10% வளர்ச்சியைக் கண்டது.பாதுகாப்பற்ற கடன் பிரிவு என்றால் எவ்விதமான அடமானமும் பெறாமல் வங்கிகள் அளிக்கும் கடன்களாகும். அப்படியானால் பர்சனல் லோன்-ம் இதன் கீழ் வரும், ஆனால் வங்கிகள் கன்ஸ்யூமர் பொருட்களுக்கான கடன் கொடுப்பதைக் குறைத்துவிட்டு பர்சனல் லோன் மட்டும் கொடுக்க என்ன காரணம்.இதுகுறித்து வங்கி அதிகாரிகள் கூறுகையில் பாதுகாப்பற்ற கடன் பிரிவு அனைத்து கடன்களுக்கும் ஓரே ரிஸ்க் தன்மை உள்ளது. ஆனால் ரூ. 50,000 க்கும் அதிகமாகக் கொடுக்கப்படும் கடன்களுக்கு ரிஸ்க் பாதிப்பு மிகவும் குறைவு. சொல்லப்போனால் பர்சனல் லோனில் பெரும் பகுதி கடன்களை வங்கிகள் திரும்ப வசூலிக்கிறது.ஆனால் கன்ஸ்யூமர் கடன் பிரிவில் 50000 ரூபாய்க்கு குறைவான கடன் கொடுக்கும் போதும் ஒப்பீட்டளவில் ஆபத்து அதிகமாக இருப்பதாகக் கருதப்படுகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *