பேட்டிங்கும் வரல..பவுலிங்கும் வரல.. ஏமாற்றிய சச்சின் மகன்.. ரஞ்சி போட்டியில் சொதப்பல்

மும்பை : ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்தியா அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 18 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. மேலும் இந்திய டெஸ்ட் அணியின் பல இடத்திற்கு வீரர்கள் தேவை என்பதால் இந்த தொடரில் சிறப்பாக விளையாடும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் இந்த தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன் டெண்டுல்கர் தற்போது கோவா அணிக்காக விளையாடி வருகிறார்.

24 வயதான அர்ஜுன் டெண்டுல்கர் இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 223 ரன்கள் பேட்டிங்கில் அடித்திருக்கிறார். இதில் ஒரு சதம் அடங்கும். பந்து வீச்சில் இதுவரை 12 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார். நடப்பு சீசனில் கோவா அணிக்காக தற்போது முதல் லீக் ஆட்டத்தில் கத்துக்குட்டி அணியான திரிபுரா உடன் அர்ஜுன் டெண்டுல்கர் களமிறங்கினார்.

இந்தப் போட்டியில் திரிபுரா முதலில் 484 ரன்கள் எடுத்தது. இதில் ஸ்ரீதாம் பால் 112 ரன்களும், கேப்டன் விரித்மான் சாகா 97 ரன்களும் எடுத்தனர். கோவா அணியின் பந்துவீச்சு தரப்பில் மோகித் என்ற வீரர் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில் அர்ஜுன் டெண்டுல்கர் 26 ஓவர்கள் வீசி 94 ரன்கள் விட்டுக் கொடுத்தார். இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார்.இதனை அடுத்து கோவா அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸ் களம் இறங்கியது.

முன்னணி வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். அர்ஜுன் டெண்டுல்கர் அணியை காப்பாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் 21 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே எடுத்து திரும்பினார்.இதனால் கோவா 135 ரன்கள் மட்டுமே எடுத்தது.இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய திரிபுரா விளையாடி 5 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்து.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *