நடராஜனுக்கு கூட கிடைக்காத மரியாதை.. சிவம் துபேவுக்கு அளிக்க பிசிசிஐ முடிவு.. இதுதான் மும்பை லாபி!

பெங்களூரு: இந்திய அணியின் இளம் வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சிவம் துபே இருவருக்கும் பிசிசிஐ ஒப்பந்தம் வழங்கப்பட முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரு டி20 போட்டிகளிலும் அரைசதம் விளாசியதோடு, 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளார் சிவம் துபே. நம்பர் 4ல் களமிறங்கி ஸ்பின்னர்களை அநாயசமாக விளாசும் திறமையை கொண்டுள்ள சிவம் துபேவை சிஎஸ்கே அணியை தொடர்ந்து இந்திய அணியும் சிறப்பாக பயன்படுத்தி வருகிறது.
பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வரும் சிவம் துபே, பவுலிங்கில் 2 ஓவர்களை வீசும் அளவிற்கு திறமையை கொண்டுள்ளார். இதனால் இந்திய அணிக்கு 6வது பவுலராக சிவம் துபே
நிச்சயம் இருப்பார் என்று ரோகித் சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதனால் ஹர்திக் பாண்டியாவுக்கான மாற்று வீரராக சிவம் துபேவை உருவாக்க இந்திய அணி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இதனால் டி20 உலகக்கோப்பை தொடரில் சிவம் துபே தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாகவே பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பிசிசிஐ தரப்பில் வழங்கப்படும் வீரர்களுக்கான வருடாந்திர ஒப்பந்தத்தில் இளம் வீரர்களான சிவம் துபே மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரையும் சேர்க்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதகா தகவல் வெளிவந்துள்ளது.