BCCI salary contract – சர்பராஸ் கான் என்ன பாவம் செய்தார்? அவருக்கு ஏன் ஒப்பந்தம் இல்லை.. இதை கவனிங்க

பிசிசிஐ ஊதிய ஒப்பந்தம் புது பட்டியல் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகமான ரிங்கு சிங் அபாரமாக விளையாடி நட்சத்திர அந்தஸ்தை பெற்றார்.

இதை போன்று திலக் வர்மா, சிவம் துபே, ரஜத் பட்டிதார், ஜித்தேஷ் ஷர்மா, ரவி பிஷ்ணாய போன்ற வீரர்களுக்கு பிசிசிஐயில் ஊதிய ஒப்பந்தத்தில் இடம் கிடைத்திருக்கிறது. இந்த நிலையில் மற்றொரு இளம் நட்சத்திர வீரரான சர்பராஸ் கானுக்கு புதிய ஒப்பந்தத்தில் இடம் கிடைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆறு ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு ரஞ்சி கிரிக்கெட்டில் அதிக சராசரி வைத்திருந்த வீரர் என்ற பெருமை எல்லாம் பெற்று சர்பராஸ் கான் இந்திய அணியில் இடம் பிடித்தார். இதே போன்று அவர் தம் விளையாடிய முதல் போட்டியில் இரண்டு இன்னிங்ஸுமே அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தார்.

62 மற்றும் 68 ரன்கள் என சேர்த்த சர்பராஸ், அவர் விளையாடிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 14 மற்றும் டக் ஆனார்.எனினும் சர்பராஸ் கானின் திறமையான ஆட்டத்தை பார்த்து கவாஸ்கர் மற்றும் ரவி சாஸ்திரி போன்ற வீரர்கள் எல்லாம் பாராட்டினர். டெஸ்ட் மட்டுமல்லாமல் ஒருநாள் கிரிக்கெட்டிலும் சர்ஃப்ராஸ்கானுக்கு இந்திய அணியில் பெரிய எதிர்காலம் இருப்பதாக பாராட்டினர்.

இந்த நிலையில் சர்பராஸ் கானின் பெயர் புதிய ஒப்பந்த பட்டியலில் இல்லை. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சர்பராஸ் கான் மட்டுமல்லாமல் துருவ் ஜுரல் பெயரும் இந்த புதிய பட்டியலில் இல்லை. இந்த நிலையில் பிசிசிஐ தற்போது விளக்கம் ஒன்று அளித்துள்ளது. அதன்படி ஒரு ஆண்டுக்கான ஒப்பந்தத்தை பெற வேண்டுமென்றால் ஒரு வீரர் குறைந்தது மூன்று டெஸ்ட் அல்லது எட்டு ஒரு நாள் அல்லது 10 டி20 போட்டிகள் இல்லாத விளையாடி இருக்க வேண்டும்.

இந்த குறைந்தபட்ச தகுதியை பெரும் வீரர்கள் தானாகவே புதிய பட்டியலில் இடம்பெறுவார்கள் என்று பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது. இதன்படி சர்பராஸ் கான் மற்றும் துருவ் ஜூரில் ஆகியோர் எல்லாம் இரண்டு டெஸ்ட்களில் மட்டும் தான் விளையாடி இருக்கிறார்கள். இதனால் தர்மசாலாவில் நடைபெறும் டெஸ்டில் இவர்கள் இருவரும் விளையாடினால் பிசிசிஐயின் சி பிரிவுகளில் இடம் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *